உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தி.மு.க., மேயரின் கணவருக்கும் தொடர்பு? கைதானவர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தி.மு.க., மேயரின் கணவருக்கும் தொடர்பு? கைதானவர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

மதுரை:மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் புதிய திருப்பமாக, தி.மு.க.,வைச் சேர்ந்த மாநகராட்சி மேயரின் கணவர், மண்டல தலைவரின் கணவர், அ.தி.மு.க., -- ம.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக, கைதான வரிவிதிப்பு குழு தலைவரின் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சியில் நடந்த, பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=na1ou7c4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியல் ரீதியான புயல் மேலும், ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டனர். பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு அடிப்படையில், இம்முறைகேட்டை தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரிக்கிறது. இந்நிலையில், இம்முறைகேட்டில் கைதான சொத்து வரி குழுத்தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, தி.மு.க., கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க., பாஸ்கரன் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டுள்ளது அரசியல் ரீதியான புயலை கிளப்பியுள்ளது. போலீசில் கண்ணன் அளித்துள்ள வாக்குமூலம்: தி.மு.க.,வில் இருந்த செல்வாக்கால் என் மனைவிக்கு சொத்து வரி விதிப்புக்குழு தலைவர் பதவி கொடுத்தனர். என் வார்டுக்குட்பட்ட மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வியாக இருந்தாலும், அவரது கணவர் மிசா பாண்டியன் தான் மண்டல தலைவர் பணிகளை மேற்கொண்டார். அதுபோல், என் மனைவியின் வார்டு பணிகளை நான் தான் கவனித்தேன். மீனாட்சி அம்மன் கோவில் பகுதி என் பக்கத்து வார்டுக்குட்பட்டது. அப்பகுதியில் அதிகமான கடைகள், ஹோட்டல்கள், ஜவுளி கடைகள், பாரம்பரியமான வீடுகள் உள்ளன. அப்பகுதி கட்டடங்களுக்கான வரி பெயர் மாற்றம், புதிய வரி விதிப்பு தொடர்பாக மக்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் என்னை அணுகுவர். நான் இதுவரை ஏராளமான ஹோட்டல், கடை, வீடுகளுக்கு வரியை குறைத்து கொடுத்துள்ளேன். இதற்காக, 25,000 முதல் 50,000 ரூபாய் வரை வாங்கியுள்ளேன். கடைக்கு வரி குறைப்பு எங்கள் மத்திய மண்டலம் உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற ரங்கராஜன், ஏற்கனவே வருவாய் உதவி ஆணையாளராக பணிபுரிந்த போது, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ரவியுடன் சேர்ந்து மாட்டுத்தாவணி பகுதியில் ஏராளமான கடைகளுக்கு வரிகுறைப்பு செய்து கொடுத்துள்ளார். அவர், மத்திய மண்டலத்திற்கு வந்த பின் உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து நகைக்கடை பஜாரில் பல கடைகளுக்கு வரி குறைப்பை செய்து கொடுத்துள்ளார். உதவி கமிஷனர் ரங்கராஜன், செந்தில்குமரன் சேர்ந்து ஒரு பிரபல ஹோட்டலுக்கு, 1 கோடி ரூபாயாக விதிக்கப்பட்ட வரியை, 'ஜீரோ'வாக்க லட்சக்கணக்கில் பணம் பெற்றனர். இதை மண்டல தலைவரின் கணவருக்கு நெருக்கமான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தனசேகரன் கண்டுபிடித்தார். அதன் பின், ரங்கராஜன், செந்தில்குமார் மண்டல அலுவலகத்தில் உள்ளவர்களை சரி கட்டினர். மண்டல அலுவலகத்தில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனசேகரன், தனக்கு கீழ் தனி டீமே அமைத்து மண்டல அலுவலகத்தில் உள்ளவர்களை பயன்படுத்தி வரிகுறைப்பு செய்து வந்தார். இதேபோல், மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சோலைராஜா, தி.மு.க., கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ மாமனார், ம.தி.மு.க., முருகானந்தம், பிரபாகரன் ஆகியோரும் வரிக்குறைப்பு செய்ய கேட்டனர். அவர்களுக்கும் செய்து கொடுத்தேன். மனைவி விஜயலட்சுமி, வரி விதிப்பு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். நானும் கைதாகியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். என்ன சொல்கிறார்கள்? கண்ணன் டூ 'வரி' கண்ணன் கண்ணனின் வாக்குமூலத்தில் 'சொத்துவரி விதிப்பு, குறைப்பு தொடர்பாக என்னை அணுகுவோரிடம் சட்டப்படி முடிக்க ஒரு தொகையும், சட்ட விரோதமாக முடிக்க ஒரு தொகையும் நிர்ணயம் செய்து வாங்கி முடித்துக் கொடுப்பேன். 'மற்ற வார்டுகளாக இருந்தால் அந்தந்த மண்டல அலுவலகத்தில் அதிகாரத்தில் உள்ள அலுவலர்கள், அதிகாரிகளுக்கும் ஒரு தொகை பேசி முடித்துக் கொடுப்பேன். 'மண்டலம் 3ன் அலுவலகத்தில் தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரனை பார்க்காமல் எந்த வேலையும் நடக்காது. வரி தொடர்பான வேலையை முடித்துக் கொடுப்பதால் என்னை 'வரி கண்ணன்' என அழைத்தனர்' என, தெரிவித்துள்ளார். திட்டமிட்ட சதி இந்த முறைகேட்டை வெளியே கொண்டு வந்ததே அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடுமையாக விமர்சித்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அந்த கடுப்பில் என் பெயரையும் திட்டமிட்டு சேர்த்து தி.மு.க., முறைகேடை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது. இந்த வழக்கில் 150 கட்டடங்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது. இதை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். - சோலைராஜா, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்ணனை நான் பார்த்தது கூட கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாராவது எதையாவது சொல் வார்கள். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. - பொன்வசந்த், மேயரின் கணவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ