உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை - பினாங்கு விமான சேவை துவக்கம்

மதுரை - பினாங்கு விமான சேவை துவக்கம்

அவனியாபுரம்: மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியா பினாங்கிற்கு இண்டிகோ விமான சேவை நேற்று முன்தினம் துவங்கியது.மதுரை விமான நிலையத்தில் இருந்து டிச., 20 முதல் சென்னைக்கு இரவு நேர விமான சேவை துவங்கியது. நேற்று முன்தினம் முதல் இரவு 9:05 மணிக்கு மதுரையில் இருந்து மலேசியா பினாங்கு பகுதிக்கு இண்டிகோ விமானம் சேவை துவக்க திட்டமிட்டிருந்தது. அன்று சென்னையில் இருந்து மதுரை வந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் நேற்று முன்தினம் இரவு 11:31மணிக்கு அந்த விமானம் மதுரையில் இருந்து பினாங்கிற்கு புறப்பட்டுச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி