உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணி நேரத்தில் விஜய்க்கு மாலை; மதுரை போலீஸ்காரர் சஸ்பெண்ட்

பணி நேரத்தில் விஜய்க்கு மாலை; மதுரை போலீஸ்காரர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் கதிரவன் மார்க்ஸ், த.வெ.க., தலைவர் விஜய் கட்சிக்காரராக மாறி மாலை அணிவித்ததால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஏட்டு கதிரவன் மார்க்ஸ். தீவிர விஜய் ரசிகரான இவர், விளக்குத்தூண் ஸ்டேஷனில் மாற்று பணியில் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2fpdmzm2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அச்சமயத்தில் கொடைக்கானல் சினிமா படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் வந்தார். அவரை பார்ப்பதற்காக பணி நேரத்தில் 'பெர்மிஷன்' கேட்டு சென்ற அவர், 'மப்டி'யில் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றதோடு மாலையும் அணிவித்து வழியனுப்பி வைத்தார்.இது குறித்த வீடியோ கமிஷனர் லோகநாதனின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து கதிரவன் மார்க்ஸை நேற்று மாலை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MP.K
மே 03, 2025 13:44

இவர் விஜய்க்கு ஓட்டுப்போடுவதை யாரால் தடுக்க முடியும் கண்டிப்பாக திமுகவுக்கு ஓட்டுப்போட வாய்ப்பில்லை


sankaranarayanan
மே 03, 2025 13:30

அய்யாயோ கதிரவனுக்கே இந்த கதியா பிறகு கதிரவனின் ஒளிகளுக்கு என்ன மவுசு இருக்கிறது கதிரவன் எப்படி உதிப்பான் எங்கே மறைவான் என்றெல்லாம் எண்ணிப்பார்க்காமலே கதிரவனுக்கு இனித்த தண்டனையா இனி குளங்களில் தாமரை பூக்கள் நன்றாகவே வளரும் இலையும் பூவுமாகா அதிமுக - பாஜாபவாக இரண்டும் ஒன்றாகவே திகழும் அதனால் இனி இலைகளை தனியாகவோ தாமரை பூவை தனியாகவோ பார்க்கவே முடியாது இரண்டும் ஒன்றாகவே திகழும் அரசாளும்


உண்மை கசக்கும்
மே 03, 2025 11:59

பணி நேரத்தில் பல அரசு தொழிலாளர்கள், ஜெயாவை சந்திக்க ராயப்பேட்டைக்கும், போயஸ்தோட்டத்திற்கும் வருவார்கள்.


naranam
மே 03, 2025 11:12

இதெல்லாம் ஒரு விளம்பரத்துக்காக செய்வது தான்! பணி இடை நிறுத்தம் பணி விதிகளின் படிதான் என்றால் மிகச் சரியான நடவடிக்கையே.


S. Venugopal
மே 03, 2025 09:30

இதுபோன்று அரசு அலுவலகம்களில் பணியாற்றும் பசுத்தோல் போத்திய சந்தர்ப்பவாத அரசியல் புலிகளால் தான் அரசு அலுவலகங்கள் பல சரியாக செயல் படமுடியவில்லை. இவர்கள் போன்றவர்களை காளை எடுக்கவேண்டும்


V Venkatachalam
மே 03, 2025 09:09

பேரு கதிரவன். அது சரி. அது என்ன மார்க்ஸ்? இது வாஸ்து பரவாயில்லை. சில அல்லோலாயாக்கள் முழுசா இந்து பேரை வச்சு கிட்டு சிறு பான்மையினர் சலுகைகள் அத்தனையும் பெற்றுக் கொண்டு ஈன பிழைப்பு நடத்தி கொண்டு இருப்பார்கள். இந்த மார்க்ஸ் விஜய்க்கு மாலை போட்டான் என்பதனால் சஸ்பெண்டு. பர்மிஷன் என்பது திருட்டு தீயமுக ஆளுங்களுக்கு மாலை போட மட்டுமே.


VENKATASUBRAMANIAN
மே 03, 2025 08:31

நல்லது. இதேபோல திமுக தலைவருக்கு மாலை அணிவித்தால் சஸ்பெண்டு செய்வார்களா


Ragupathy
மே 03, 2025 09:03

பிரமோஷன் கிடைக்கும்...


RAMAKRISHNAN NATESAN
மே 03, 2025 08:16

இந்தத்ததளபதியை இறக்குனது, இறக்கி இயக்குவது அந்தத்தளபதிதானே ன்னு மாலை போட்டுட்டாரு ...


KRISHNAN R
மே 03, 2025 08:05

பெர்மிஷன் குடுத்து விட்டு... இப்படி செஞ்சிட்டியே


ponssasi
மே 03, 2025 11:49

அவர் விஜய் பார்க்க பெர்மிஸ்ஸின் கேட்கவில்லை, எமெர்கெனசி லீவு கேட்டு சென்றவர். காவல் துறையில் ஒழுங்கீனங்கள் தக்க தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனால் ஒழுகீனங்கள் அதிகமாக இருப்பதுவும் காவல்துறையில்தான்


முக்கிய வீடியோ