உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி.க., கொடிக்கம்ப பிரச்னையில் மதுரை வருவாய் அலுவலர்கள் போராட்டம்

வி.சி.க., கொடிக்கம்ப பிரச்னையில் மதுரை வருவாய் அலுவலர்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடும் பிரச்னையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதையடுத்து நேற்று மதுரை மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலர்கள் விடுப்பு எடுத்து, அலுவலகங்களை பூட்டி பணிப்புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=442o8xyj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிலநாட்களுக்கு முன் வி.சி.க., தலைவர் திருமாவளவன் மதுரை வந்தார். அவர் வெளிச்சநத்தத்தில் 25 அடி உயர கொடிக்கம்பத்தை 45 அடி உயரமாக மாற்றி அமைத்து கொடியேற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி, போலீஸ், வருவாய்த் துறையினர் கொடிக்கம்பத்தை நிறுவ விடாமல் தடுத்தனர்.பேச்சு வார்த்தைக்குப்பின், மாவட்ட நிர்வாகம் அவசர அனுமதி வழங்கி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பழனியாண்டி, வி.ஏ.ஓ., பரமசிவம், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோரை பிரச்னைக்குரிய தகவலை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக்கூறி தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோர் சஸ்பெண்ட் செய்தனர்.இந்த நடவடிக்கைக்கு வருவாய்த்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‛சம்பவ இடத்தில் 3 நாட்களாக கண்காணித்து தகவலை தெரிவித்துள்ளோம். நிலைமையை உணர்ந்து கூடுதல் போலீசாரை நியமிக்காததால் அங்கு தள்ளுமுள்ளு சம்பவம் நிகழ்ந்தது. இதில் வருவாய் அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வருவாய் அலுவலர்கள் மீது எடுத்தது பாரபட்சமானது' என்றனர்.இதனால் வருவாய்த்துறையில் அலுவலர் சங்கம், நேரடி நியமன அலுவலர்கள் சங்கம், பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம், நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணிபுறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கப்பட்டது.அத்தனை சங்கங்களும் ஒன்று சேர்ந்ததால், மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலர்கள் பணியாற்றும் 11 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு, பொது வினியோகம், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலம், மாவட்ட பதிவு வைப்பறை, நிலஅளவைத் துறை என பெரும்பாலான பிரிவுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. தாலுகா உட்பட வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு பூட்டுப்போடப்பட்டன.கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், கோபி, ஜெயகணேஷ், கண்ணன், முத்துமுனியாண்டி, ராஜாமணி, சுரேஷ், மாரியப்பன், நந்தகுமார், சண்முகராஜா உட்பட அலுவலர்கள் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.அவர்கள் கூறுகையில், ''வருவாய் அலுவலர்கள் மூவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சம்பவத்தின் போது நடவடிக்கை எடுக்காத போலீசார், அதற்கு காரணமான கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்' என்றனர்.

கலெக்டர் கூறுவது என்ன

கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''அலுவலகங்களில் துணை கலெக்டர்கள் பணியாற்றுகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. சங்கத்தினருடன் நேற்று முன்தினமே பேச்சு வார்த்தை நடத்திவிட்டோம். இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

21 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

மதுரை வெளிச்சநத்தத்தில் டிச. 7 ல் அனுமதியின்றி வி.சி.க., கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த துணை தாசில்தார் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் அனிதா, வி.ஏ.ஓ., பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோர் தாக்கப்பட்டனர். பரமசிவம் புகாரில் வி.சி.க., மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது அரசு ஊழியர்களை தாக்குதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உரிய அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்பட்டதாக ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ராமகிருஷ்ணன்
டிச 12, 2024 21:36

கட்சியே தடை செய்யப்பட வேண்டிய ரவுடி கும்பல். இதிலே இவங்க கொடி பிரச்சனை வேறா வெட்கக்கேடு


Karthikeyan
டிச 12, 2024 15:00

45 அடி உயர கொடிக்கம்பம்.. எல்லாம் தலைவரோட ஆதரவினால இப்படி ஆடுகிறான் வெறுமா...


Narasimhan
டிச 12, 2024 13:39

கொத்தடிமை கூட்டத்துக்கு கொடி 25 அடி இருந்தாலென்ன 45 அடி இருந்தாலென்ன? தலித்துகளுக்காக உண்மையாக போராடிய மனிதரை எஜமானர்களை குஷி படுத்துவதற்காக ஆறு மாதம் இடை நீக்கம் செய்து விட்டனர். தலைவரே தன்னை இடை நீக்கம் செய்துகொள்வதுதான் சரி


Madras Madra
டிச 12, 2024 11:40

தலித் அரசியல் எல்லா எல்லைகளையும் கடந்து விட்டது


angbu ganesh
டிச 12, 2024 10:41

ஊர்ல அவன் அவன் சாப்பிட்டு கூட வழி இல்லாம வெயில் மழை பக்கமா சுத்தரான், கொடி நட ... அதிகாரம் இருக்குன்னா என்ன வேணா செய்வானுங்க ஒழச்சு பிழைங்க இப்படி பொழைக்காதீங்க


m.arunachalam
டிச 12, 2024 09:26

கொடி நட்டவுடன் நாட்டின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா அல்லது அடுத்த முதல்வர் ஆகா முடியுமா ? மெது மெதுவே உழைக்காமலே வளர்கிறார்கள். இலவசங்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகைகளுக்கும் நன்றிகள் . வாழ்க பாரதம் .


Varadarajan Nagarajan
டிச 12, 2024 08:11

தங்கள் கட்சிக்கு கொத்தடிமையாக இல்லாத கட்சிகள் மற்றும் எதிர் கட்சிகள் கொடியேற்றும்போதுமட்டும் இந்த கொடிக்கம்ப பிரச்சனை முளைக்கிறது. ஆளும்கட்சி கொடிமரம் வைத்து கொடியேற்றும் போதெல்லாம் இந்த பிரச்சனை வருவதில்லை. 18 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து காவல்துறையும் தனது விசுவாசத்தை காட்டியுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தால், புகார் ஏதும் வரவில்லை என்று தட்டிக்கழிப்பார்கள். அதையும் மீறி அழுத்தம் வந்தால் சில பேட்டி பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடப்படும் குற்றவாளிகள் என சொல்லுவார்கள். அவர்களது கடமைக்கும் பாராட்டுக்கள்


முருகன்
டிச 12, 2024 07:30

தவறு யார் மீது இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


sankaranarayanan
டிச 12, 2024 07:30

வெள்ள நிவாரண பனி இன்னும் முடிந்த பாடில்லை அதற்குள் எந்த கம்பத்திலே யார் எப்படி கொடி ஏற்றினால் என்ன இதுவா இப்போது முக்கியம் ரோம் நகரே பற்றி எரியும்போது மன்னர் பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம் அதுபோன்றுதான் இது இருக்கிறது மக்களுக்கு உடனடி என்ன தேவைகள் என்று புரிந்து அதில் எல்லா கட்சிகளும் ஆக்க பூர்வமான் உதவிகளை மக்களுக்கு செய்யுங்கள் இதுபோன்ற செயல்கள் இத்தருணத்தில் தேவையே இல்லாதவைகள்


R.RAMACHANDRAN
டிச 12, 2024 07:27

அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் நடுவதை அவர்கள் சொந்த இடத்தில் வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை