உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மஹா கும்பமேளாவில் பிரமாண்ட சமையலறை; தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

மஹா கும்பமேளாவில் பிரமாண்ட சமையலறை; தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்பமேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப் படுகிறது. நாடு முழுதும் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளா துவங்கியதில் இருந்து, நேற்று வரை, 11.47 கோடி பேர், புனித நீராடி உள்ளனர்.வரும், ஜனவரி 29ம் தேதி, மவுனி அமாவாசை என்பதால், அன்று மட்டும் 10 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம், 60,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மஹா கும்பத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அன்னதானம் கமிட்டி அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களிடம் நிறைய இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். இங்கு 500க்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கிறார்கள்.3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவு பரிமாறுகிறார்கள். எங்களிடம் 2000 கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய குளியலறை உள்ளது. சமையலறையில் ஒரே நேரத்தில் 2,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் அதிக அளவு காய்கறிகளை வெட்டுவதற்கான இயந்திரங்களும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kalyan
ஜன 27, 2025 21:53

அன்னதானம் 1% பேருக்கு போதுமானது . மீதி 99% வரும் யாத்தரியர் தானமாக உண்ணாமல் உணவு வாங்கி உட்கொள்ள போதுமான வசதிகள் அங்கு உள்ளன.


என்றும் இந்தியன்
ஜன 27, 2025 17:21

ஒரு நாளைக்கு வருவது பல கோடி வெறும் 1% அதாவது 1 லட்சம் பேருக்குதானா அன்னதானம்??புரியவில்லையே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 13:03

உ பி யை விட முன்னேறிய மாநிலமான டுமீலு நாட்டுல சரக்கு, கோழி பிரியாணி, பணம் இல்லாம தேர்தல் இல்லை....


V வைகுண்டேஸ்வரன்
ஜன 27, 2025 17:31

நீங்கள் பிறந்த மாநிலத்தை நீங்களே அவமரியாதையாக எழுதுகிறீர்களே. உங்களுக்கு நாட்டுப்பற்று கிடையாதா? எந்த மாநிலத்தில் மது இல்லை?? எல்லா மாநிலத்திலும் அரசாங்கம் தான் மது விற்கிறது. அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் மது விற்கிற மாதிரி புலம்புகிறீர்கள்???


Ganapathy Subramanyam
ஜன 27, 2025 11:12

மதிற்பிற்குரிய தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தற்போது, உத்திரப்பிரதேசம் பிரயாக் ராஜில் மஹா கும்பமேளா நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. 144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்க, நம் நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் பக்தர்கள், கோடிக்கணக்கில் பங்கேற்று புனிதம் அடைந்து வருகின்றனர். அதே சமயம், என் போன்ற வயதானவர்கள், தங்கள் வயது மூப்பு காரணமாக, அங்கு செல்ல முடியாமல் ஏங்குகிறார்கள். மேலும் இனி 144 வருடங்களுக்குப் பிறகு அடுத்த மஹா கும்பமேளா நிகழும்பொழுது இந்தத் தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறையினரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். அவர்களின் மனக்குறையைத் தீர்க்க, இதற்கு முன்பு பல சமயங்களில் செய்தது போல, நம் இந்திய தபால் துறை முன் வந்து, உத்திரப்பிரதேச அரசின் உதவியுடன் திரிவேணி சங்கமத்தில் இருந்து, புனித நீரை போதுமான அளவு சேகரித்து பிளாஸ்டிக் பைகளிலோ, பாட்டில்களிலோ நிரப்பி, சீல் வைத்து, தேவையனவர்களின் விண்ணப்பத்தின் பேரில் வினியோகிக்கலாம். இதற்காக ஆகும் தொகையையும் பக்தர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். இந்த புனிதமான காரியத்தை தினமலர் நாளிதழ் முன்னெடுத்து செய்து கொடுத்தால் என் போன்ற வயதானவர்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்.


Skn
ஜன 27, 2025 15:42

Welcome to the suggestion


என்றும் இந்தியன்
ஜன 27, 2025 17:24

ஆஹா இதை பிசினஸ் செய்பவர்கள் படித்தால் உடனே இன்னும் 6 நாட்களில் விளம்பரம் ஆரம்பித்து விற்பனை கொடிகட்டிப்பறக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை