உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய கல்வி அமைச்சரிடம் நிதி கேட்டார் மகேஷ்

மத்திய கல்வி அமைச்சரிடம் நிதி கேட்டார் மகேஷ்

சென்னை,: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்கும்படி வலியுறுத்தினார். டில்லியில் நேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழக கல்வி அமைச்சர் மகேஷ், பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் கனிமொழி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, தமிழகத்துக்கான, 2024 - 2025ம் ஆண்டுக்கான சமக்ர சிக் ஷா நிதியான, 2,152 கோடி ரூபாயையும், கட்டாய கல்வி நிதியான, 617 கோடி ரூபாயையும், இந்தாண்டுக்கான முதல் பருவ நிதியையும் வழங்கும்படி வலியுறுத்தி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூலை 29, 2025 15:47

செவிடன் காதில் சங்கு ஊதுவது மாநில அரசின் கடமை, என்ன செய்வது?


C.SRIRAM
ஜூலை 29, 2025 20:00

செவிடன் மற்றும் இரு நூறு உ பி நீர் தான் . திட்டத்தில் சேராமல் திட்ட நிதியை யார் கொடுப்பார்கள். மூளையை உபயோகிக்கவேண்டும்


xyzabc
ஜூலை 29, 2025 21:53

மத்திய அரசின் காதில் பூ சுத்துவதே மாடல் அரசின் வேலை. எப்ப பாரு .. பணம் கொடுக்கல.. ரூ கொடுக்கல. ஒப்பாரி தாங்க முடியல. மாடல் அரசின் மந்திரிகள், எம் பி க்கள் சொத்து குவியலில் அபார சாதனை. தமிழகத்தை யாராவது காப்பாத்தனும் . அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டி வந்தாச்சு. இன்னும் வெள்ளை அறிக்கை வரல. எதுவும் கேட்க கூடாது.


Indian
ஜூலை 29, 2025 12:10

ஓரவஞ்சனை அரசிடம் நீங்கள் எது கேட்டாலும் கிடைப்பதில்லை


Mario
ஜூலை 29, 2025 09:37

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017 முதல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. இதில் நியமிக்கப்பட்ட 203 ஆசிரியர்களில், 202 பேர் போலி கல்வி சான்றிதழ்களைப் பயன்படுத்தி பணிக்கு சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


புதிய வீடியோ