உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "பார்வையிழப்புக்கு முக்கிய காரணம் கண் புரையே

"பார்வையிழப்புக்கு முக்கிய காரணம் கண் புரையே

சென்னை: 'உலகிலேயே நம் நாட்டில் தான், அதிக பார்வையிழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமான கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்'' என, சங்கர நேத்ராலயா நிர்வாக அதிகாரி இளங்கோவன் கூறினார். அண்ணா நகரில் உள்ள மூத்த குடிமக்கள் அமைப்பும், 'நைட்டிங்கேல்' மகளிர் சங்கமும் இணைந்து, பொதுமக்கள் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில், கண் புரை, நீரிழிவு விழித்திரை, கண் அழுத்த நோய், கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் மற்றும் குழந்தைகள் கண் நலம் குறித்து விளக்கப்பட்டது. கண் புரை குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியும் நடந்தது.இதில், 11 சதவீதம் பேர், 'கண் புரையைக் குணமாக்க முடியாது; 31 சதவீதம் பேர், சொட்டு மருந்துகளால் குணமாக்க முடியும்; 22 சதவீதம் பேர், கண்ணாடி அணிவதால் குணமாக்க முடியும்' என குறிப்பிட்டனர். சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி இளங்கோவன் கூறும் போது, ''உலகிலேயே நம் நாட்டில் தான் அதிகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமான கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். மருத்துவத் துறையின் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, கண் புரை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ