உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.சி., நிர்வாகிகளை மேடையில் நிற்க வைப்பதா?

எஸ்.சி., நிர்வாகிகளை மேடையில் நிற்க வைப்பதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : துணை முதல்வர் உதயநிதி, பட்டியலின நிர்வாகிகளை அவமதித்ததாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலையை, உதயநிதி திறந்து வைத்தார். அதன்பின், பொதுக்கூட்டம் நடந்தது. கூட்ட மேடையில், புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., துணை செயலர் -அரையப்பட்டி மதியழகன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரிய தலைவர் இளையராஜா ஆகியோருக்கு இருக்கை மறுக்கப்பட்டுள்ளது.தன் கட்சியில் பலமான பொறுப்பில் இருக்கும் பட்டியலின நிர்வாகிகளை நிற்க வைக்கும் அநீதியை அனுமதித்தாரா உதயநிதி? மாமன்னன் படத்தில் சொன்னதை போல, 'உட்காருங்க' என உதயநிதி ஏன் சொல்லவில்லை?இரண்டு மாதங்களுக்கு முன், இதே 'தாட்கோ' இளையராஜாவை அமர வைத்து, 'போட்டோ ஷுட்' எடுத்தார் உதயநிதி. விளம்பர மோகம் கொண்ட பொய் முகத்திரையை அந்த நிகழ்வு கிழித்தெறிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raj
மே 27, 2025 07:45

மேடையில் நிற்க வச்சதுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறியே.


Barakat Ali
மே 26, 2025 10:23

உங்களைப்போல திருமாவும் குரல் கொடுப்பாரா ????


Suresh sridharan
மே 26, 2025 08:44

பட்டியலினம் SC ST இவர்களுக்கு முழு மரியாதை கொடுத்தவர் ஜெயலலிதா அதற்கு அடுத்தபடி மோடி வேறு யாருக்கும் கொடுக்கவில்லை மற்ற எல்லாரும் நடிகர்களே போட்டோ எடுக்க மட்டுமே நிற்க வைப்பார்கள் அதுவும் நிக்க அப்புறம்????


Gentleman
மே 26, 2025 06:50

இப்படி சொன்னால் எஸ்.சி., ஓட்டு கிடைக்குமா கிடைக்காது கண்ணா நடக்காது கண்ணா இந்த தடவையும் தோற்பது உறுதி


Mani . V
மே 26, 2025 04:38

நாங்க, எங்களின் வாழ்நாள் கொத்தடிமை திருமா வுக்கே பிளாஸ்டிக் சேர்தான் கொடுக்கிறோம்.


Padmasridharan
மே 26, 2025 03:49

படத்துல நடிக்க சொல்வது டைரக்டர். அரசியல்ல நடக்க சொல்வது விரலின் வோட்டு. சினிமா மூலமா புகழ தேடி வாங்கி அரசியல்ல நுழையணும். அங்க காட்டற மாதிரியே அரசியல்ல நடத்தணும்னா வெறும் குறைகளை வாயால பேசற கட்சிகள் ஆளும் கட்சியை நடுவிலேயே இறக்க முடியுமா. சினிமா நடிப்பும் அரசியல் நடிப்பும் வெவ்வேறு என மொதல்ல தெரிஞ்சிக்கணும் பலரும்


Kasimani Baskaran
மே 26, 2025 03:42

திராவிடம் என்பதே பட்டியல் இனம் என்றால் அதிகபட்சமாக பிளாஸ்டிக் சேர் மட்டுமே கொடுக்கும் ஒரு பிற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு அமைப்பு. உருட்டுவது மட்டும் நேர் விரோதமாக இருக்கும்


D.Ambujavalli
மே 26, 2025 03:28

நீங்க ஒண்ணு , கட்சித் தலைவருக்கே பிளாஸ்டிக் நாற்காலி இவர்களுக்கு என்ன ஆசனம் வேண்டியிருக்கு? பதவிக்காக இல்லாவிட்டாலும், வயதுக்காகவாவது மரியாதை தரவேண்டும் என்ற பாடமெல்லாம் syllabus யிலேயே கிடையாதே


மீனவ நண்பன்
மே 26, 2025 03:01

பெத்துராஜ் வந்திருந்தால் அமர வைத்திருப்பார்