உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஆடி சலுகைகள்

மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஆடி சலுகைகள்

சென்னை:'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்' நிறுவனம், ஆடி மாதத்தை முன்னிட்டு, தனித்துவமான பண்டிகை கால சலுகைகளை அறிவித்து உள்ளது. ஆடி தள்ளுபடியின் ஒரு அங்கமாக, வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கம், வெட்டப்படாத வைரம் மற்றும், 'ஜெம்ஸ்டோன்' நகைகளுக்கு, சேதாரத்தின் மீது, 30 சதவீத சலுகையை பெறலாம். மேலும், வைரத்தின் மதிப்பில், 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகள், விதிமுறை, நிபந்தனைக்கு உட்பட்டு, ஆக., 10 வரை செல்லுபடியாகும். மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ், அதன், 'மலபார் வாக்குறுதிகள்' வாயிலாக, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, வாடிக்கையாளர் திருப்தி ஆகிய முக்கிய மதிப்பீடுகளை தொடர்ந்து நிலைநாட்டுகிறது. முழு நம்பகத் தன்மையையும், அதன் கொள்முதல் துவங்கி, இறுதி நகை விற்பனை வரை, அதன் பயணத்தை உறுதி செய்யும் விதத்தில், ஒவ்வொரு நகையும், 100 சதவீதம் எச்.யு.ஐ.டி., இணக்கமானது. ஒவ்வொரு நகைக்கும் ஓராண்டு இலவச காப்பீடு அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு அனைத்து ேஷாரூம்களிலும், வாழ்நாள் முழுதும் இலவச பராமரிப்பும், பழைய தங்கம் மற்றும் வைரங்களுக்கு, 100 சதவீத எக்ஸ்சேஞ் மதிப்பும் உறுதி செய்யப்படுகிறது. வெளிப்படையான விலை நிர்ணயமும், விரிவான விலை விபரங்களும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை