உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விலை மதிப்பில்லா புன்னகையுடன் பொங்கல் கொண்டாடிய மாளவிகா: பாராட்டி மகிழ்ந்த முதல்வர்

விலை மதிப்பில்லா புன்னகையுடன் பொங்கல் கொண்டாடிய மாளவிகா: பாராட்டி மகிழ்ந்த முதல்வர்

சென்னை: தமிழக அரசின் பொங்கல் சேலையை அணிந்து, பொங்கல் கொண்டாடிய, மாளவிகா ஐயரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.கும்பகோணத்தை சேர்ந்தவர் மாளவிகா ஐயர். இவருக்கு வயது 35. இவரது தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் இன்ஜினியராக இருந்தவர். ராஜஸ்தானில் உள்ள பீகானிர் நகரில் குடும்பத்துடன் இவர் வசித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு மாளவிகா ஐயர் தனது 13 வயதில், விளையாடும்போது குப்பையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து தனது 2 கைகளையும் இழந்தவர். இவர் தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.பொங்கல் பண்டிகையை ஒட்டி, சமூக வலைதளத்தில் தமிழக அரசு வழங்கிய விலையில்லா சேலையை அணிந்து, புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த பதிவில் அவர் கூறியதாவது: தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா!பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்தப் பதிவை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின், 'பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்' என பாராட்டி இருந்தார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
ஜன 16, 2025 17:12

இந்த சாரை தெரியுமாம்மா ? பார்த்து சாக்கிரதையா இரும்மா ...


Ramesh Sargam
ஜன 15, 2025 12:56

அடுத்தமுறை திமுக வெற்றிபெற்று ஆட்சியில் தொடர்ந்தால், ஒவ்வொரு பண்டிகைக்கும் வீடுதேடி வந்து பண்டிகை இனாம்களை - ஓசி பொருட்களை - ஒவ்வொரு வீட்டினருக்கும் கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.


Anantharaman Srinivasan
ஜன 15, 2025 14:42

ஓசி பொருட்களை - ஒவ்வொரு வீட்டினருக்கும் கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.அடுத்த திமுக ஆட்சிக்கு... உறுதியளிக்க நீ யாரு..?


Ramesh Sargam
ஜன 15, 2025 20:09

நான் கூறிய கருத்தின் உள் அர்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு ஜென்மம் என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டிருக்கிறது. என்ன ஜென்மங்களோ...?


Anantharaman Srinivasan
ஜன 15, 2025 11:06

தாம்பரம் பல்லாவரம் பகுதி பெண்களுக்கு புடவையும் கிடைக்கலே புன்னகையும் பூக்கலே.


Anantharaman Srinivasan
ஜன 15, 2025 11:02

பலருக்கு இன்னும் புடவை வேஷ்டி கிடைக்கவில்லை. புறநகர் கடைகள் இன்னும் மோசம்.


vijay
ஜன 15, 2025 10:38

அரசு வழங்கினாலும், அதெல்லாம் மக்களின் வரிப்பணம்தான். காங்கிரெஸ்ஸோ, தீமுகவோ, பிஜேபி-யோ யார் இப்படி கொடுத்தாலும் அது மக்களின் வரிப்பணம்தான். சம்பாதித்த காஸிலோ அல்லது கமிஷன் காசில் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கினோம் என்று ஆதாரம் காட்டினாக்க மட்டும்தான் அப்படிப்பட்ட அரசை, கட்சியை நாம் வாழ்த்தவேண்டும், பாராட்டவேண்டும்.


Gopinath
ஜன 15, 2025 10:26

அருமை வாழ்த்துக்கள்


Gopinath
ஜன 15, 2025 10:24

திருந்துங்க , அடுத்தவனை வாழ வைக்கும் தமிழன், தமிழனா வாழ வைத்ததே இல்ல.


chennai sivakumar
ஜன 15, 2025 09:33

என் துணைவியார் அவர்களும் அரசு வழங்கிய பொங்கல் சேலையை அணிந்துதான் பொங்கல் கொண்டாடினார். இதெல்லாம் ஒரு மேட்டரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை