உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க வைகோவுக்கு மல்லை சத்யா அட்வைஸ்

கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க வைகோவுக்கு மல்லை சத்யா அட்வைஸ்

சென்னை: “கடந்த 2001, 2006 சட்டசபை தேர்தல்களைப் போல, வரும் தேர்தலின்போது கடைசி நேரத்தில், தி.மு.க., கூட்டணியிலிருந்து ஓடிவிடக்கூடாது,” என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்தார். வைகோவின் மகனும், ம.தி.மு.க., முதன்மைச் செயலருமான துரை உடன் ஏற்பட்ட மோதலால், கட்சிப் பணிகளில் இருந்து சத்யா ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், துரோகி என வைகோ குற்றஞ்சாட்டியதால் கொந்தளித்த மல்லை சத்யா, வைகோவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இச்சூழலில் யார் துரோகி எனக்கேட்டு, சென்னை, சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், மல்லை சத்யா நேற்று உண்ணாவிரதம் இருந்தார். இதில், நுாற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, அவர் பேசியதாவது:

கடந்த, 28 ஆண்டுகளாக ஜனநாயகவாதியாக இருந்த வைகோ, மகன் வந்ததும் மறுமலர்ச்சி தி.மு.க.,வை, 'மகன் தி.மு.க.,' என மாற்றி விட்டார். கட்சி துவக்கப்பட்ட காலத்திலிருந்து உழைத்தவர்களுக்கு, எந்த மரியாதையும் இல்லை. மகனுக்காக என்னை துரோகி என, வைகோ கூறியுள்ளார். இதற்கு நீதி கேட்டு தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, வைகோ கூறி வருகிறார். கடைசி வரை, அவர் அதில் உறுதியாக இருக்க வேண்டும். கடந்த 2001, 2006 சட்டசபை தேர்தல்களின்போது, தி.மு.க., கூட்டணியிலிருந்து, கடைசி நேரத்தில் ஓடியதை இன்றும் யாரும் மறக்கவில்லை. அதுபோல, வரும் 2026 சட்டசபை தேர்தலின்போது ஓடிவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

panneer selvam
ஆக 03, 2025 11:52

Mallai Satya ji , Your leader is known for taking wrong decision at right time at every time at all the time. Now the time has come due to aging to generate wealth for his people . So it is only offer and deal


senthilanandsankaran
ஆக 03, 2025 08:21

காமெடி பீசு.. வாஜ்பாய் கூட கூட்டு வைச்சப்போ உனக்கு இனிச்சுதா" ... திமுகவோட இருங்கிறான்...அப்படி என்ன இவருக்கு பிஜேபி மேல காண்டு....ஒ மிஷனரி பணம்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 03, 2025 07:27

கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க ...போகலை ...பெட்டியை உடனே கொடுங்கள் . ஜம்புலிங்கமாக மாறி கூட்டணிமாறினால்தான் பெட்டி வரும் ....இன்றுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வசூல் செய்த கூட்டத்தின் தலைவன் வைகோ .. எப்படி ஜம்ப் பண்ணாமல் இருப்பார்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 03, 2025 06:55

பெட்டியை முதலிலேயே கொடுத்தால் நாங்கள் ஏன் கடைசி வரை காத்திருக்கப் போகிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை