உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக மிரட்டி மூதாட்டியிடம் பணம் பறித்தவர் கைது

டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக மிரட்டி மூதாட்டியிடம் பணம் பறித்தவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆவடி : ஆவடி அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி, 62; ஓய்வுபெற்ற விரிவுரையாளர்.அவரது மொபைல் எண்ணிற்கு, கடந்த ஜூலை 17ம் தேதி, மும்பை சைபர் கிரைமில் இருந்து அழைப்பதாகக் கூறி, மர்ம நபர் ஒருவர் வீடியோ காலில் பேசியுள்ளார்.அப்போது, மேரி ஜெனட் டெய்சி பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டு வாயிலாக சமூக விரோத செயல் நடந்ததாக கூறி, வங்கி கணக்கு விபரங்களை மர்மநபர் கேட்டுள்ளார்.ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனை செய்து, வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து விசாரித்து, 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்வர் என, மிரட்டியுள்ளார்.இதனால் பயந்து போன அவர், மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு, 38.16 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார்.இது குறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மர்ம நபரின் மொபைல் எண்ணை கண்காணித்து, சென்னை அண்ணா நகரில் பதுங்கியிருந்த பிஜாய், 33, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.விசாரணையில், 12ம் வகுப்பு வரை படித்துள்ள பிஜாய், வேலை கிடைக்காமல், ஆன்லைன் வாயிலாக மோசடி செய்வோருடன் கூட்டு சேர்ந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதற்காக, 13 வங்கிகளில் கணக்கு துவங்கி, சி.பி.ஐ., அதிகாரி, மும்பை சைபர் கிரைம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரி என கூறி, பலரை ஏமாற்றியுள்ளார்.மேலும், ஆன்லைன் பங்குச் சந்தை மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பெற்ற பணத்தை, வெளிநாடுகளில் 'கிரிப்டோ கரன்சி'யாக மாற்றி, மோசடி செய்து வந்துள்ளார்.அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, இந்தியா முழுதும் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.மோசடிக்காக பயன்படுத்திய மொபைல் போன், லேப்டாப், ஒன்பது டெபிட் கார்டுகள், நான்கு வெல்கம் கிட், இரண்டு பாஸ்புக் மற்றும் ஒன்பது செக் புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து, போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rasheel
டிச 27, 2024 16:51

மக்கள் - போலீசோ யாருமோ, ஆன்லைனில் அர்ரெஸ்ட் செய்ய முடியாது FIR கட்டாயம் என்பதை உணர வேண்டும். மானம் கேட்ட சேட்டன், சட்டையில் அழுக்கு படாம சம்பாதிக்கணும்.


PARTHASARATHI J S
டிச 26, 2024 22:39

வேற வேலை இல்லையா ?


Venkatesan Ramasamay
டிச 26, 2024 11:09

அதாவது ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் ... அந்த பொம்பளைக்கு எங்கபோச்சு அறிவு.. இதுல விரிவுரையாளர வேற வேலை செஞ்சிருக்காங்க ..படிச்சா பொம்பளைக்கு புத்தியில்ல ..அவன் கேட்டவுடனே 38 லட்சம் பணம் போட்டாங்களாம்.. கேட்கவே கேவலமா இருக்கு ..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 09:00

கேரள சேட்டன்தான்.. அவர்களைப்போல இந்தத்தொழிலில் அதிகம் ஈடுபடுவதால் ஆபத்தானவர்கள் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 08:47

போட்டோவ பார்த்தா பொலிகாளை மாதிரி இருக்கானே ???? உழைச்சு பிழைச்சா என்னவாம் ????


Kasimani Baskaran
டிச 26, 2024 07:31

மாடல் அரசு இது போன்ற கிரிமினல்களை ஒன்றும் செய்யாது.


அப்பாவி
டிச 26, 2024 06:43

மூணே நாளில் வெளியே வந்து தொழில் கண்டிநியூ பண்ணுவாரு.


DARMHAR/ D.M.Reddy
டிச 26, 2024 06:33

இப்படிப்பட்ட கயவனை போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி அரசரால் இந்த குற்றத்துக்கு அவரால் எவ்வளவு அதிக சிறை தண்டனை வழங்க முடியுமோஅதை வழங்கினால் தான் இவன் போன்ற குற்றம் செய்பவர்கள் திருந்த வழியுண்டு.


Subramanian
டிச 26, 2024 06:31

Why the authorities are not taking action against mobile service providers for such bulk issuance of SIM cards. Why banks are not verifying the back ground before ing the account. Why no action against bankers or mobile service providers


நிக்கோல்தாம்சன்
டிச 26, 2024 06:29

உழைக்காமல் உடம்பை வளர்க்கும் கூட்டத்தில் இவனும் ஒருவன்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 09:03

அதைச் சுட்டிக்காட்டினா சங்கின்னு சொல்றாங்க ......


முக்கிய வீடியோ