உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: சக ஊழியர் 3 பேரை சுட்டுக்கொன்ற நபர்

அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: சக ஊழியர் 3 பேரை சுட்டுக்கொன்ற நபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: டெக்சாஸில் நிறுவனம் ஒன்றில் சக ஊழியர்களை 3 பேரை கொன்ற நபர், பின்னர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இறந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. அங்கு துப்பாக்கி கலாசாரம் பெருகிவிட்டது. இதற்கு அங்கு துப்பாக்கிகள் வைத்து இருப்பதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.சக ஊழியர்களை 3 பேரை கொன்ற நபர், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்த போது மற்ற ஊழியர்கள் சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பகுதியில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், 21 வயதான ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், இது தற்செயலானது அல்ல என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க நிறுவனத்தில் சக ஊழியர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

naranam
நவ 10, 2025 14:45

இது தினம் நடக்கவில்லை என்றால் தான் பெரிய செய்தி.. இதெல்லாம் அமெரிக்காவில் அனுதினமும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு தான்.


KOVAIKARAN
நவ 10, 2025 13:05

ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ என்பது மெக்ஸிகன் பெயர். அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கி சூட்டில் ஈடுபவர்கள் அதிகமாக மெக்ஸிக்கன்கள் மற்றும் கறுப்பர்கள்தான்.


Ramesh Sargam
நவ 10, 2025 11:07

துப்பாக்கி சூடு அமெரிக்காவில் சர்வசாதாரணம். இருந்தாலும் டிரம்ப் பதவி ஏற்றபின்பு இந்த துப்பாக்கி சூடு பிரச்சினை ரொம்பவே அதிகம் ஆகிவிட்டது. டிரம்ப் அவர்கள் வாயை திறந்தாலே தான் அந்த நாட்டு போரை நிறுத்தினேன், இந்த நாட்டு போரை தவிர்த்தேன் என்று தம்பட்டம் அடிக்கிறார். ஆனால் அவர் புழக்கடையில் நடக்கும் இந்த தொடர் துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான முடிவு காணாமல் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் இருந்தும் தவிக்கிறார்.


சமீபத்திய செய்தி