உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்; 4 பேர் கைது

சென்னையில் மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்; 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்ற போது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மனைவி மற்றும் குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு 7 தையல் போடப்பட்டுள்ளது. குழந்தையின் கழுத்தியில் காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qkbq4d49&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாஞ்சா கயிறு அறுந்து, பாதிக்கப்படும் சம்பவம் இனிமேல் நடக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
நவ 18, 2024 20:23

மாஞ்சா கயிறு சம்பவம் இன்று நேற்றா சென்னையில் நடக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. மாஞ்சா கயிறை விற்பதற்கு முதலில் தடை விதிக்கவேண்டும். மீறுபவர்களுக்கு, திருட்டுத்தனமாக உபயோகிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.


SUBRAMANIAN P
நவ 18, 2024 13:35

காட்டுமிராண்டிகள் என்னிக்கி திருந்தபோறீங்க


S. Gopalakrishnan
நவ 18, 2024 10:52

மாஞ்சா நூல் பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை செய்யுங்கள் ! வேங்கைவயல் விஷயம் கிடக்கிறது !


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை