உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஞ்சோலை தொழிலாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதா?

மாஞ்சோலை தொழிலாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊழியர்களை, விருப்ப ஓய்வு விண்ணப்பங்களில், வற்புறுத்தி கையெழுத்திட வைத்துள்ளனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசிடமிருந்து, 99 ஆண்டுகள் குத்தகைக்கு, மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி, 'பி.பி.டி.சி., எனும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' நிறுவனம் நிர்வகிக்கிறது. கடந்த 2018ல், 8,374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அரசு அறிவித்தது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை, பி.பி.டி.சி.,நிறுவனம் அறிவித்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தொழிலாளர்கள் தரப்பில்,'மறுவாழ்விற்கான உதவிகள் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழக அரசின் 'டான்டீ' தேயிலை தோட்டக் கழகம் நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்' என, வழக்கு தொடரப்பட்டது.இதேபோல, 'விருப்ப ஓய்வு திட்டத்தில், தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை, ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என, புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு அமர்வுக்கு மாற்றி, கடந்த விசாரணையின்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.அதன்படி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடியதாவது:மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், 'பாரம்பரிய வனவாசி' என்ற வரையறையின் கீழ், இடம்பெற மாட்டார்கள். புலம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது. தேயிலை தோட்டத்தை, 'டான்டீ' கையகப்படுத்துவது சாத்தியமில்லை. ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளது. மனிதாபிமான அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, வணிகக் கடன் வழங்குவதுடன், வீட்டு மனை, வீடுகள் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மணிமுத்தாறில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தயாராக உள்ளன. பாரம்பரியமாக வசிப்போர் மட்டுமே, வனப்பகுதியில் குடியிருக்க உரிமை உள்ளது. மற்றவர்கள் வசிக்க உரிமையில்லை.இவ்வாறு அவர் வாதாடினார்.பி.பி.டி.சி., நிறுவனம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ''மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதி, காப்புக்காடு மற்றும் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடர இயலாது. இது, ஊழியர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதால், அவர்களுக்கு நிறுவனம் இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கி உள்ளது,'' என்றார்.மனுதாரர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், 'வலுக்கட்டாயமாக தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை பெற உரிமை உள்ளது. இயற்கையோடு வாழ்ந்த இடத்திலேயே, தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர்.இதையடுத்து அனைத்து தரப்பிலும், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

mindum vasantham
நவ 07, 2024 11:04

திமுகவினர் காட்டு மிருகங்களை வேட்டை ஆடுகிறார்கள்


தமிழ்வேள்
நவ 07, 2024 09:13

உடன் பிறவா சகோதரி குடும்பம் எஸ்டேட் வைத்து உள்ள போது தங்களுக்கும் ஒன்று வேண்டும் என்ற எண்ணத்தில் ஓங்கோல் வகையறா இந்த எஸ்டேட் ஐ விழுங்க முயல்கிறது...கம்மி கும்பல் ஜி சதுர எஸ்டேட் விழுங்க லுக்கு ஒருசில கோடிகளை எதிர் பார்த்து அமைதி..


தமிழ்வேள்
நவ 07, 2024 11:35

மாஞ்சோலை எஸ்டேட்டில் பாதிக்கப்பட்டோர் , கிருஷ்ணசாமி வகையறாக்கள் என்பதால் , குருமா மவுனம் ...இதுவும் ஒரு தரப்பு


Kanns
நவ 07, 2024 07:11

Other than Providing All Jobs only Minm Wages from Labourer to President, Recover Entire& All 90% UnDue Freebies/Concessions from Concerned Parties Without Any Stays by Court-Judges& Credit into Govt Accounts


rama adhavan
நவ 07, 2024 07:09

அரசு ஒரு பென்ஷன் போல் பலன் தர வேண்டும். இங்கு பணி ஆற்றிவிட்டு எங்கு போவார்கள். இந்த விவகாரத்தில் கம்மிகள் ஏன் வாய் திறக்கவில்லை?


Svs Yaadum oore
நவ 07, 2024 06:57

இந்த விடியல் ஆட்சியே சாராய கம்பெனி முதலாளிகள் நடத்தும் கார்பொரேட் கம்பெனி ஆட்சி ..தொழிலாளிகளை மிரட்டி கையெழுத்து ...மூன்று தலைமுறையாக வசித்து வரும் மாஞ்சோலை தொழிலாளி இப்பொது இடம் பெயர்ந்து போக வேண்டும் என்று சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்.. உலகில் எந்த பிரச்சனைக்கும் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவும் மதுரை பாராளுமன்றம் யோக்கியன் இதற்கு மட்டும் வாய் திறக்க மாட்டான் .....இவனுங்கதான் சமூக நீதி மத சார்பின்மை சமத்துவம் சகோதரத்துவம் ஆட்சியாம் ...வெட்கம்கெட்ட தனமாக உள்ளது ...


Svs Yaadum oore
நவ 07, 2024 06:50

இது அக்கிரமம் அநியாயம் ..இதுதான் சமூக நீதியா ??....விடியல் அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பாரம்பரிய வனவாசி என்ற வரையறையின் கீழ், இடம்பெற மாட்டார்கள் என்றும் அதனால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது என்று கோர்ட்டில் வாதம் ...இது கார்பொரேட் முதலாளிகளுக்கு ஆதரவு தரும் விடியல் கார்பொரேட் கம்பெனி கட்சியின் ஆட்சி ......மூன்று தலைமுறையாக வசித்து வரும் தொழிலாளி இப்பொது இடம் பெயர்ந்து போக வேண்டும் என்று சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்? இந்த தொழிலாளர்கள் என்ன வனத்தை அழித்து விட்டார்களா ??.விடியல் இவனுங்கதான் சமூக நீதி மத சார்பின்மை சமத்துவம் சகோதரத்துவம் ஆட்சியாம் ....மானங்கெட்டத்தனமாக உள்ளது ....


Karuthu kirukkan
நவ 07, 2024 06:20

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை- வரலாறு


சமூக நல விருப்பி
நவ 07, 2024 06:15

.... நிமிர்த்த முடியுமா


நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 06:13

பாரம்பரியமாக வாழ்பவர்கள் மட்டும் அனுமதி, அது எப்படிங்க பாரம்பரியமாக என்று சொல்றீங்க, தமிழகத்தில் வீட்டில் தாய்மொழியாக தெலுங்கு தங்களை தமிழர்கள் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் ஏமாற்றுவது போலவா ?


Kasimani Baskaran
நவ 07, 2024 05:15

பழைய திமுக மாறவில்லை என்பதற்கான அத்தாட்சி. உடன்பிறப்புக்களையும், ஊடக அடிமைகளையும் வைத்து ஓரளவுக்குத்தான் ஏமாற்ற முடியும். இது திமுகவுக்கு பின்னடைவையே கொண்டுவரும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை