உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே கல்லில் பல மாங்காய்; திருமாவை போட்டுத்தாக்கினார் திண்டுக்கல் சீனிவாசன்!

ஒரே கல்லில் பல மாங்காய்; திருமாவை போட்டுத்தாக்கினார் திண்டுக்கல் சீனிவாசன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''திருமாவளவன் அண்ணா தி.மு.க.,வினரை மாநாட்டுக்கு அழைத்த ஒரே வார்த்தையில், பல மாங்காய்களை அடித்து விட்டார்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில், அக்.,2ம் தேதி வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் தி.மு.க., சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்., இளங்கோவன் பங்கேற்றனர். இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vdlshpg6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் சீனிவாசன் பேசியதாவது:வி.சி.க., தலைவர் திருமாவளவன், 'மது ஒழிப்பு என்ற மாநாடு நடத்த போகிறேன். அதற்கு எல்லா கட்சிகளும் வரலாம். அ.தி.மு.க.,வும் வரலாம்' என்று ஒரு வார்த்தை சொன்னார். அப்போது, அமெரிக்காவில் இருந்தார் முதல்வர் ஸ்டாலின். வந்த உடன் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலின், 'மாநாட்டில் எடப்பாடியார் கலந்து கொள்ளலாம் என்று சொல்லுறீங்களே, அது அரசாங்கத்தை எதிர்ப்பதாக இருக்காதா? நீங்கள் இப்படி ஒரு தீர்மானத்தை போடலாமா? அந்த மாநாட்டை நடத்தலாமா? இதற்கு எடப்பாடியாரை கூப்பிடலாமா' என்று கேட்கிறார்.இதற்கு, 'அது உங்களுக்கு ஆதரவாக தான் செய்கிறேன்' என்று கூறியிருக்கிறார் திருமாவளவன். பேசி முடிந்ததற்கு பிறகு, 'மாநாடு நடத்துங்கள், அந்த மாநாட்டில் தி.மு.க., கலந்து கொள்ளும். எங்கள் சார்பில், ஆர்.எஸ்.பாரதி, இளங்கோவன் பங்கேற்று வாழ்த்துவார்கள். அரசாங்கத்திற்கு எதிராக எந்த தீர்மானமும் போட வேண்டாம். மத்திய அரசிற்கு எதிராக எல்லாம் போடுங்கள்' என்று சொல்லி விட்டார்.மாநாட்டுக்கு அத்தனை செலவுகளும், நேரு, எ.வ.வேலு பார்த்துக்கொள்ள, தி.மு.க., போட்ட மேடை, தி.மு.க., போட்ட சேர்கள் மற்றும் தி.மு.க.,வின் செலவிலே வி.சி.க., தொண்டர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு அன்றறைக்கு சேருகிறது.ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பார்கள் என்று சொல்லுவார்கள். திருமாவளவன் அண்ணா தி.மு.க.,வினரை அழைத்த ஒரே வார்த்தைக்காக, பல கோடி ரூபாயை ஆதாயமாக ஸ்டாலின் இடமிருந்து அமைச்சர்கள் மூலம் பெற்று அந்த மாநாட்டை நடத்தியதாக ஒரு நாடகம் ஆடுகிறார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால், அ.தி.மு.க., கூட்டணிக்கு திருமாவளவன் கட்சி போகப்போகிறது என்று பத்திரிகைகளில் எழுதினால், என்ன விளைவு வரும் என்று திருமாவளவனுக்கு தெரியும். தெரிந்து தான் அந்த ஆயுதத்தை எடுத்துப்போடுகிறார். அது அவருக்கு வெற்றி கொடுத்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

திருமாவளவன் பதிலடி

இதற்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பையும், மறுப்பையும் தெரிவித்துள்ளார். இதற்கு, நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: வி.சி.க., மது ஒழிப்பு மாநாடு தி.மு.க., செலவில் நடந்ததாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. எங்களுக்கு எதிரான விமர்சனம் நகைப்புக்குரியது. திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அபாண்டமான அவதூறு.இதனை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். விடுதலை சிறுத்தை கட்சி பொதுமக்களின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் தான் இயங்கி கொண்டு இருக்கிறோம். இது நாடு அறிந்த உண்மை. மக்கள் அறிந்த உண்மை.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramesh Sargam
அக் 10, 2024 22:29

திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழகத்தில் மதுவிலக்கு என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. எல்லாம் ஒரே நாடகம். பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் பூரண மதுவிலக்கு வர வாய்ப்புள்ளது.


பேசும் தமிழன்
அக் 10, 2024 19:23

அதிமுக சீனிவாசன் அவர்கள் கூறுவது 100 சதவீதம் உண்மையாக இருக்க வாய்புள்ளது..... இல்லையெனில் யாரை எதிர்த்து மாநாடு போட்டாரோ.... அந்த கட்சி ஆட்களையே மேடையில் ஏற்றுவாரா.... தமிழக மக்களை எல்லாம் கேனயர்கள் என்று நினைத்து விட்டீர்களா ???


பேசும் தமிழன்
அக் 10, 2024 19:18

யப்பா தெருமா..... ரீல் அந்து போச்சு.... கடைகளை திறந்து வைத்து சாராயம் விரிப்பது யார்.... கடையை மூட சொல்லும் கூட்டத்தில்.... கடையை நடத்தும் ஆட்களையே மேடையில் உட்கார வைத்து விட்டு விட்டு...... இப்போது இப்படி கூறினால் மக்கள் எப்படி ஏ‌ற்று‌க் கொள்வார்கள் ???


rama adhavan
அக் 10, 2024 18:47

இப்படி பெரிய கட்சிக்கு அடிமை ஆக பல காலம் இருந்தால் சொந்த கட்சி அழிந்து போகும்.


Anantharaman Srinivasan
அக் 10, 2024 18:08

கூட்டணியிலிருக்கும் சிறிய கட்சிகளை ஆதரிப்பது திராவிட கட்சிகளான திமுக அதிமுகவும் தான் என்பது ஊருக்கே தெரிந்த உண்மை.


pv, முத்தூர்
அக் 10, 2024 17:08

எலக்சன் கு பெட்டி, புட்டி எல்லாம் அங்கதானே வாங்கிகறீங்க.


Ms Mahadevan Mahadevan
அக் 10, 2024 16:59

ஓ கே. திமுக பணம் தரவில்லை. மாநாடு நடத்த செலவு வி சி க செய்ததா? திருமா கணக்கு கட்டுவார. பில் ரசிது காட்டுவாரா? யோக்கியமான ஆள் என்றால் கணக்கு சரியாக காட்டவேண்டும் வர்வு செலவு கணக்கு


Palanisamy Sekar
அக் 10, 2024 16:54

ஊரே அறிந்த ரகசியத்தை சீனிவாசன் போட்டுடைக்க ஆடிப்போன திருமாவின் ரியாக்ஷன் நகைப்புக்கு உரியதே. ஸ்டாலின் இவரிடம் சொன்னதும் உண்மை, ஐவரும் கூழை கும்பிட்டு போட்டு கையை காலாக நினைத்து கும்பிட்ட போட்டோவும் உண்மையே. அதனால் விசிக மாநாடு திமுகவின் பிச்சை. அதில் உண்டு ஒய்யார திறந்த வெளி ஊர்வலமும், கும்பலாக குடியும்.. காண கண்கோடி வேண்டும். ஒருக்காலும் திருமா திமுகவை விட்டு வெளியே வரவே மாட்டார்.


Venkatesan
அக் 10, 2024 15:12

திருமாவளவன் பதில் சக்கரை பொங்கலுக்கு சால்னா தொட்டுக்கொள்ள கொடுத்தது போல உள்ளது. இதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்


Ravi Kumar Damodaran
அக் 10, 2024 16:22

ஹா ஹா ஹா. உங்கள் சென்ஸ் ஆப் ஹுமாயூர் அபாரம். திருமாவே நிச்சசயம் ரசிப்பார்.


vijai
அக் 10, 2024 14:20

மானங்கெட்ட பொழப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை