உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்: அடித்து சொல்கிறார் இ.பி.எஸ்.,

அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்: அடித்து சொல்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரக்கோணம்: 'அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அரக்கோணத்தில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், இ.பி.எஸ்., பேசியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில் மேலும் சில முக்கிய கட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qps0cbkl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பகல் கனவு

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு. மக்களைப்பற்றி கவலை அவருக்கு இல்லை. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., அபார வெற்றி பெறும். அ.தி.மு.க., ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன.

குடும்ப ஆட்சி

தி.மு.க.,வின் குடும்ப அரசியலாக, குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்கிய பெருமை தி.மு.க.,வையே சாரும். அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக முழுவதும் சிறப்பான சாலைகள் மேம்பாலங்கள் கொண்டு வரப்பட்டன.

ஸ்டிக்கர்

தி.மு.க., ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து கிடப்பில் போட்டு விடுவார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க., செயல்படுத்தி வருகிறது. மக்களைப் பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் தி.மு.க., அரசு முடக்கியுள்ளது

ஆதரியுங்கள்

நல்லாட்சி தமிழகத்தில் நிலவ அ.தி.முக., கூட்டணியை ஆதரியுங்கள். 2010ல் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை தடுத்து நிறுத்த அ.தி.மு.க., அரசு நீதிமன்றம் மூலம் முயற்சித்தது. நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஓட்டளித்த மக்களை பற்றி கவலை இன்றி தி.மு.க.,வில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பி ன் சிவகுமார்
ஜூன் 09, 2025 06:35

வரமாட்டார்கள். ஆனால் பயமுறுத்தி வரவைப்போம்


Mariadoss E
ஜூன் 08, 2025 22:02

பிஜேபி மற்றும் அதிமுக சேர்ந்தும் பயம் போகவில்லை அது தான் பாமக, டம்டக், த்வக் என அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு வர அழைக்கும் அந்த பயம் இருக்கட்டும்.


J.Isaac
ஜூன் 08, 2025 18:52

அதிமுக கூட்டணியா? அல்லது பாஜக கூட்டணியா ?


SIVA
ஜூன் 08, 2025 18:10

தேமுதிக , பாமக இவர்களுக்காக இந்த கூட்டணி காத்திருக்க வேண்டாம் , எங்கள் கூட்டணியில் இத்தனை கட்சிகள் மட்டுமே உள்ளன என்று சொல்லி இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் , இங்கு கூட்டணி கதவு அடைக்கப்பட்டால் அவர்கள் பேரம் பேசும் வலிமை குறையும் , பின்னர் தானாக கூட்டணிக்கு வருவார்கள் .....


SIVA
ஜூன் 08, 2025 18:02

சென்ற முறை பிஜேபி கூட்டணியை விட்டு வெளியேறினால் சிறுபான்மை ஓட்டுகள் கிடைக்கும் , மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இவருடன் கூட்டணிக்கு வரும் என்று நம்பி ஏமாந்தார் , தப்பாக கணக்கு போட்டு கூட்டணியை முறித்து கொண்டார் ...


Svs Yaadum oore
ஜூன் 08, 2025 14:29

இந்த சுயநலவாதி கடைசி நேரத்தில் நடிகன் கட்சியுடன் கூட்டணி வைத்து நைசாக ப.ஜா.க.,வை கழட்டி விடுவார். சினிமா நடிகனை அறிவாலயம் வளர்த்து விடுவது இது போன்ற வேலைக்குத்தான். இந்த ரெண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி வைத்து கொள்ளை அடிப்பது மட்டுமே அவனுங்க கொள்கை. இந்த கொள்ளை கூட்டத்தில் சேர்ந்ததுதான் இங்குள்ள படு ஆபாச சினிமா, நெறியாளனுங்க, கம்யூனிஸ்ட், மனித உரிமை காவலாளி, சுற்று சூழல் போராளி, வானவியல் விஞ்ஞானி, தமிழ் மொழி வாட்ச்மேன்கள் என்று பல முக்காடு போட்டு வருபவர்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 08, 2025 14:09

எடப்பாடி பலமான கூட்டணியை திறமையாக நடத்தி செல்ல வேண்டும். திமுக கொண்டு வந்துள்ள மகளீர் ஓட்டு புடுங்கும் தொகை கூட்டத்தை சமாளித்து ஓட்டுகளை தங்கள் பக்கம் மடை மாற்ற வேண்டும். அதற்கு நம்பிக்கை தரும் புளுகுகளை அள்ளி விடலாம், தவறில்லை. திமுக 200 தொகுதிகளில் டிபாசிட் இழந்து வாஷ் அவுட் ஆக வேண்டும். அண்ணாமலையுடன் சற்று அனுசரித்து போய் இருந்தால் சிறப்பாக இருக்கும்.


Murugesan
ஜூன் 08, 2025 13:36

இரண்டு திராவிட கட்சிகளும் கேவலமானதுதான், அதில் எடப்பாடி மிக மோசமான சுயநலவாதி. இந்த ஆளை நம்பி பாஜக அண்ணாமலையை ஒதுக்கியது. இனி ஏழேழு ஜென்மத்துக்கும் பாஜக நோட்டாவை தாண்டாது. இனி எங்க குடும்ப ஓட்டு பாஜகவுக்கு இல்லை, நோட்டாவிற்குத்தான்.


Svs Yaadum oore
ஜூன் 08, 2025 14:23

சுயநலவாதி கடைசி நேரத்தில் நடிகன் கட்சியுடன் கூட்டணி வைத்து நைசாக ப.ஜா.க., வை கழட்டி விடுவார். இந்த நடிகனை அறிவாலயம் வளர்த்து விடுவது இது போன்ற வேலைக்குத்தான். அப்பறம்தான் டெல்லிக்கு தெளியும் ..


RRY
ஜூன் 09, 2025 06:13

NDA no need ur vote


sureshpramanathan
ஜூன் 08, 2025 13:08

Edappadi is a waste We need Annamalaiji to run Tamilnadu corruption free good governance.


RRY
ஜூன் 09, 2025 06:19

If bjb _ADMK want to win the election,we should keep malai, issai and kanyakumari ex MP pori urundai in Andaman Islands for one year until the upcoming assembly election is over


Ramesh Sargam
ஜூன் 08, 2025 12:51

பல கட்சிகள் வரும். ஆனால் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்களா என்பதில்தான் எங்களுடைய சந்தேகம். எப்பொழுதும் போல தொகுதி பங்கீடு, சீட் பங்கீட்டில் ஆரம்பிக்கும் பாருங்கள் பிரச்சினை. அப்படி எதுவும் ஏட்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை