உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அபராத வட்டி தள்ளுபடியாகும் எதிர்பார்ப்பில் கடனை திரும்ப செலுத்தாமல் பலர் டிமிக்கி

அபராத வட்டி தள்ளுபடியாகும் எதிர்பார்ப்பில் கடனை திரும்ப செலுத்தாமல் பலர் டிமிக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஏற்கனவே அபராத வட்டியை தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் ஒரு முறை தள்ளுபடி செய்யும் எனக்கருதி, கடன் வாங்கியவர்கள், அதை திரும்ப செலுத்தாமல் இருப்பதால், வீட்டுவசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன் பாக்கியை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு, நியாயமான விலையில் வீட்டு மனைகள் கிடைக்கவும், குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கவும், நகர்ப்புற வீட்டுவசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. தற்போது, 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இவை கடன் வழங்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும், அவற்றை ஒருங்கிணைக்கவும், 'கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இணையம்' உள்ளது.

நிலுவை

வீட்டுவசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன் தொகையை வசூலிக்க, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. நிலுவைத்தொகை செலுத்திய 5,300 பேர், இன்னும் பத்திரம் திரும்ப கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது நிலுவையில் உள்ள, 1,000 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் பணியை முடுக்கிவிட, சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்குவது குறித்து, அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், அபராத வட்டியுடன், கடன் நிலுவையை வசூலிக்க வேண்டிய நெருக்கடி, ஊழியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தில், வீட்டுவசதி சங்கங்கள் பெயரில் உள்ள நிலுவைத்தொகை, மத்திய கால கடனாக மாற்றப்பட உள்ளது. அதேநேரம் உறுப்பினர்கள் பெயரில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான பணிகள் முடங்கிஉள்ளன. ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு, இன்னும் பத்திரம் கிடைக்காத நிலையில், நிலுவை கடனை, அபராத வட்டியுடன் திரும்ப செலுத்த யாரும் தயாராக இல்லை. இதனால், சங்கங்கள் கடனை வசூலிக்க முடியாமல், புதிய கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, சங்கங்கள் பெயரில் உள்ள நிலுவைத் தொகையை, மத்திய கால கடனாக மாற்றுவதிலும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.வீட்டு வசதித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், வீட்டு வசதி வாரியம், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் தொடர்பாக மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.

பரிதவிப்பு

வீட்டுவசதி சங்கங்கள் தொடர்பான பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை. இதற்கென தனியாக நேரம் ஒதுக்க, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தயாராக இல்லை. இதனால், நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல், வீட்டுவசதி சங்கங்களும், பத்திரம் கிடைக்காமல் உறுப்பினர்களும் பரிதவிக்கின்றனர். இதன் பிறகாவது இந்த விஷயத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Babu Babu
ஜூலை 09, 2025 07:44

கடனாளி பலர் இறந்துவிட்டார்கள் வாரிசு கங்கு வயது 60 ஆகிவிட்டது ஏழை எளியோர் கடன் தள்ளுபடி வழங்கிய கடன் 50ஆயிரம்மட்டும் கலைஞர் நடுத்தர வருவாய் கடன் ரூபாய் 2 இவட்சம் வட்டி 18இலட்சம் கடனையை யார்கட்டுவாராகள்? சங்கம் வைத்து வீடு நாசம்


Gv Kathir
ஜூலை 09, 2025 02:10

1998 ஆம் ஆண்டு வழங்கிய வீட்டுக் கடன் தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கு, முப்பதாயிரம் கட்டி விட்டோம். மீதி தொகை தள்ளுபடி ஆகும் என நினைத்து 90 ஆயிரம் கட்டாமல் விட்டு விட்டோம். ஆனால் 90 ஆயிரத்திற்கு ஐந்து ஆண்டுக்கு முன்பு 3 லட்சத்து 80 ஆயிரம் வட்டி போட்டு கேட்டதால் இன்று வரை எங்கள் பத்திரத்தை திருப்ப முடியவில்லை. எங்கள் பத்திரம் 1998 ஆம் ஆண்டு வைகை ஆற்றில் வந்த வெள்ளத்தில் எங்கள் பத்திரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது எங்களது பத்திரத்தை காண்பித்து நாங்கள் கட்ட வேண்டிய 90 ஆயிரத்தை மட்டும் வசூல் செய்தால் எங்களுக்கு சம்மதம் செய்யுமா இந்த அரசாங்கம் எனது தொலைபேசி எண் 8531028182


visu
ஆக 07, 2025 19:04

வருட வட்டி 8% போட்டால் கூட 1 லட்சத்துக்கு 25 வருடத்துக்கு 2 லட்சம் +அசல் 90 ஆயிரம் கூடுதல் ஒரு 50 ஆயிரம் போட்டா 325000 வருது இதை நீங்கள் காட்டாமல் ஏமாற்றினால் உங்க சக குடிமகன்கள்தான் கட்ட வேண்டும் வாங்கும்போதே ஏமாற்றவேண்டும் என்று வாங்குவதால் கட்ட தோணுவதே இல்லை


சந்திரசேகர்
ஜூலை 08, 2025 14:20

தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி. சுய உதவி குழு கடன் தள்ளுபடி மற்றும் பொதுமக்கள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து ஓட்டு வாங்கி உலக வங்கியில் கடனை வாங்கி தமிழ்நாட்டை திவாலாக்கலாம்


rama adhavan
ஜூலை 08, 2025 04:24

வீடு கட்டி விற்று ரியல் எஸ்டேட் செய்வது அரசின் பணி அல்ல. தனியார் வேலை இது. அரசு செய்தால் ஊழல், கட்சி /அரசியல்வாதிகளுக்கு சலுகை இவை தான் மிஞ்சும்.


Kasimani Baskaran
ஜூலை 08, 2025 03:49

பணமிருந்தும் கடனை கட்டமனமில்லை என்றால் அவர்களுக்கு தண்ட வட்டி போடுவது ஞாயமானதுதான்.