உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமண உதவித்தொகை உயரும்

திருமண உதவித்தொகை உயரும்

சென்னை:தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 80வது கூட்டம், சென்னையில் நடந்தது.அதில், அமைச்சர்கணேசன் பேசியதாவது:சென்னை, மாமல்லபுரம், குற்றாலம், வால்பாறை பகுதிகளில் உள்ள ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன; விரைவில் அவை திறக்கப்படும். தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட பயன்களை அதிக தொழிலாளர்கள் பெறுவதற்காக, தற்போதுள்ள ஊதிய உச்சவரம்பு, 25,000த்தில் இருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.வாரியம் வழியே, 30,134 தொழிலாளர்களுக்கு, 12.54 கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. திருமண உதவித் தொகை, கடந்த ஆண்டு ஏப்., 1 முதல், 10,000 ரூபாயில் இருந்து, 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது; இது, 25,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ