உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றணும்; அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றணும்; அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: 'அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில், சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பூரண மதுவிலக்கு என்பது எங்களது கொள்கை அல்ல. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல் மதுக்கடைகளை குறைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும்.தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. மத்திய அரசு தமிழக மீனவர்கள் என்று பார்க்காமல் இந்திய மீனவர்கள் என்ற பார்வையை மாற்றிக்கொண்டு நிர்வாக ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பது என்பது மீனவர் பிரச்னைக்கு தீர்வாக இருக்காது.அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பென்ஷன் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவை ரத்து செய்து, ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். த. வெ. க., தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு ஏதோ பிரதிபலனை எதிர்பார்த்து பா.ஜ., அரசு செய்திருக்கிறது. பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு தொடர்ந்து அதிகாரிகளால் ஆய்வு என்ற பெயரில் தாமதப்படுத்தி வருகின்றனர். பாம்பன் பாலத்தை திறக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Krishna Moorthy
பிப் 16, 2025 09:15

நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு, வரும் தேர்தலுக்காக முழித்துக் கொண்ட கூட்டணிகளை மக்கள் தூக்கி எறியவேண்டும். இனிமேலாவது ஓட்டை விற்காமல் தெளிவாக சிந்தித்து கட்சியை தேர்வு செய்வார்களா?


Bhaskaran
பிப் 15, 2025 22:58

இப்படி பேசினால் கிடைக்கும் இனிப்புப்பெட்டி கிடைக்காது இனி உண்டியல் குலுக்கினால் யாரும் பத்துபைசாகூட போடமாட்டார்கள். பார்த்து பதவிஷா பொளச்சுக்குங்க காம்ரேட்டுகளா


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 15, 2025 22:57

ஏற்கனவே டீசல் விலை குறைப்பு காஸ் சிலிண்டர் மானியம் மாதாமாதம் மின் அளவை கணக்கிடுதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல், மதுக்கடைகள் மூடுவிழா போன்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இன்னும் எந்த வாக்குறுதி நிறைவவேற்றப்படவில்லை என்று சொன்னால் பெட்டியில் காந்தி கடுதாசி இன்னும் கொஞ்சம் அமுக்கி வைக்கப்படும்.


Suppan
பிப் 15, 2025 20:50

பழைய ஓய்வொஓதியத்திட்டம் கொண்டுவந்தால் தமிழக அரசு போண்டியாகும் என்று தெரிந்தும் இந்தக்கம்மி இப்படி பேசுகிறாரே ? எதோ தேர்தல் சமயத்தில் வாக்குகளுக்காக வாக்களித்தனர். அதை நிஜமென்று நம்புகிறீர்களே அவ்வளவு அப்பாவியா? தேர்தல் நிதிக்காக அடி போடுகிறீர்களா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 15, 2025 20:07

இந்த கம்யூனிஸ்ட் கட்சி காரர்கள் எப்பொழுதும் எப்பொழுதும் இடையில் புகுந்து குட்டை குளப்புவதில் வல்லுனர்கள். ஜாதகத்தில் ராகு கேது இருப்பதை போல நாட்டில் இந்த கம்யூனிஸ்ட்கள் அனைத்துக்கும் இடைஞ்சல் செய்வார்கள்.


sk
பிப் 15, 2025 18:56

undial kulluka start paniyachu...


Kjp
பிப் 15, 2025 16:27

மின் கட்டணம் உயர்வு பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு இன்னும் பல உயர்வு கட்டணங்கள் பழைய ஓய்வூதியம் டீசல் விலை குறைப்பு கேஸ் மானியம் இவற்றிற்கு எல்லாம் நாலு பேரை கூட்டி மயில் இறங்காமல் தடவி அரசுக்கு கண்டணம் தெரிவித்து விட்டு போய் பம்மிக் கொள்வீர்கள்.கம்னியூஸ் கட்சி நாட்டின் சாபக் கேடு


S. Neelakanta Pillai
பிப் 15, 2025 16:07

ஐயா, சொல்லிட்டாரு..... உடனே வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவார்கள். நீங்க கேட்கலாம் இன்னும் ஒரு வருடம் கூட இல்லையே ஆட்சி முடிவதற்கு என்று, அதுக்கு என்ன செய்ய முடியும் இவர் இப்பதானே பதவிக்கு வந்து இருக்காரு. கடந்த நாலு வருடமாக இந்த ஆட்சி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று இவருக்கு தெரியாதல்லவா இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலே இருந்தாலும் பதவிக்கு வந்தால் தான் அவருக்கு தெரியும் இல்லை என்றால் அவருக்கு எதுவுமே தெரியாது அதனால் தான் அரசை மயில் இறகால் தடவி கொடுத்து கேட்கிறார். மானம் இழந்து, மதி இழந்து கம்யூனிசம் என்ற தத்துவம் இழந்து பதவி என்ற ஒன்றை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள் வெட்கக்கேடு.


Kumar Kumzi
பிப் 15, 2025 15:50

தேர்தல் நெருங்குது பொட்டிக்கு அடி போடுறான்


Ramalingam Shanmugam
பிப் 15, 2025 15:03

25 சி வேணுமா நேரா கேட்க வேண்டியது தானே நோட்டா தோழரே


சமீபத்திய செய்தி