உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவில் அதிர்ச்சி; பூங்காவில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி: 8 பேர் படுகாயம்

அமெரிக்காவில் அதிர்ச்சி; பூங்காவில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி: 8 பேர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் புகழ்பெற்ற பேர்மவுண்ட் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்று இரவு 10.30 மணியளவில் பூங்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.,யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramaraj P
மே 27, 2025 14:56

இதெல்லாம் வெறும் செய்தி தான். ஒவ்வொரு மாதமும் 100-400 பேர் அமெரிக்காவில் இப்படி துப்பாக்கி சூட்டில் சாகுவது இயல்பானது.


அப்பாவி
மே 27, 2025 11:50

அங்கேயும் கோர்ட்டு, கேசுன்னு போனா ஒரு நியாயமும் கிடைக்காது போலிருக்கு. அதான் அவிங்களே தீர்த்துக்கறாங்க. திருனவேலி மாடல்.


sivakumar Thappali Krishnamoorthy
மே 27, 2025 11:39

துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் அந்த நாட்டில் எல்லோர் கைகளிலும் சுலபமகா கிடைக்கிறது. அமெரிக்கா ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடு. ஆயுதத்தினாலேயே அழிவர்.


Sampath
மே 27, 2025 11:22

இன்னும் 2 பில்லியன் தரவும்


Ramesh Sargam
மே 27, 2025 11:19

அமெரிக்காவில் அதிர்ச்சி - இந்த தலைப்பே தவறு. அமெரிக்காவில் காலம் காலமாக துப்பாக்கி சூடு பிரச்சினை இருக்கிறது. ஆகையால் தலைப்பு - அமெரிக்காவில் தொடர்ச்சி என்று தலைப்பு இருக்கவேண்டும். அதற்கு ஒரு நிரந்தர முடிவு காண இதுவரை பதவியில் இருந்த அதிபர்களும், இப்பொழுது இரண்டாம் முறை அதிபர் பதவியில் இருக்கும் டிரம்ப்பும் கூட மொத்தமாக தோல்வி அடைந்திருக்கிறார்கள். உள்நாட்டில் காலம் காலமாக நடக்கும் இந்த பிரச்சினைக்கு முடிவு காண வக்கில்லாதவர்கள், மற்ற நாட்டு பிரச்சினைகளில் தாமாகவே மூக்கை நுழைப்பார்கள்.


Tirunelveliகாரன்
மே 27, 2025 11:50

வக்கில்லாதவர்கள் கூட நம்மிடம் தலையிடுறாங்கன்னா, தேர்தல் பிரச்சாரத்துக்கெல்லாம் கூப்பிட்டதால் நம்மள வீக்க்குன்னு நினைக்கிறானோ.


RAJ
மே 27, 2025 11:08

இப்போ புரியுதா எங்கள் வலி???


முக்கிய வீடியோ