மீனம்பாக்கத்தில் அதிகபட்சம்; சென்னையில் பெய்த மழைப்பொழிவு விபரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பெஞ்சல் புயல் எச்சரிக்கை தொடர்ந்து, கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் விபரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெஞ்சல் புயல் இன்று மாலை முதல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்து வருகிறது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்கிறது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான மழை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் - 15 செ.மீ.,பேசின் பிரிட்ஜ் - 14 செ.மீ.,வலசரவாக்கம் - 13.5 செ.மீ.,வடபழனி - 13.38 செ.மீ.,திருவொற்றியூர் - 13.35 செ.மீ.,அயப்பாக்கம் - 13.26 செ.மீ.,தண்டையார்பேட்டை - 13.2 செ.மீ.,மத்திய சென்னை - 12.5 செ.மீ.,மடிப்பாக்கம் - 12.39 செ.மீ.,கத்திவாக்கம் - 12.3 செ.மீ.,அமைந்தகரை - 12 செ.மீ.,நுங்கம்பாக்கம் - 11.88 செ.மீ.,புழல் - 11.85 செ.மீ.,அடையாறு - 11.76 செ.மீ.,கொளத்தூர் - 11.7 செ.மீ.,ஆலந்தூர் - 10.74 செ.மீ.,ஐஸ் ஹவுஸ் - 10.71 செ.மீ.,மணலி - 10.56 செ.மீ.,அண்ணா நகர் (மேற்கு) - 10.53 செ.மீ.,சோழிங்கநல்லூர் - 9.88 செ.மீ.,