உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள உருவி பகுதியில் நேற்று 200 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. கேரளாவில் வழக்கமாக, ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, நேற்று முன்தினம் பருவமழை துவங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள உருவி பகுதியில் நேற்று 200 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. கண்ணூர், இடுக்கி, காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், பத்னம்திட்டாவில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இடுக்கி, வெள்ளத்தூவல்- 160 மி.மீ.,கண்ணூர், அய்யக்குன்னுவில்- 250 மி.மீ.,கண்ணூர், செம்பேரி- 130 மி.மீதிருச்சூர் பீச்சி, வயநாடு கரபுழா- 120 மி.மீ.,

'ரெட் அலர்ட்'

1. மலப்புரம், 2. கோழிக்கோடு, 3. வயநாடு, 4. கண்ணுார், 5. காசர்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலெர்ட்' விடுத்து உள்ளது.

கரை ஒதுங்கிய கண்டெய்னர்கள்!

கேரளா மாநிலம் கொச்சி அருகே அரபிக்கடலில் மூழ்கிய எம்.எஸ்.சி.3 கப்பலின் கண்டெய்னர்கள் கரை ஒதுங்கின. கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கருநாக பள்ளி கடற்கரை யோரம் ஒதுங்கிய கண்டெய்னர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 30 பேர் கொண்ட குழு கொல்லம் விரைகிறது.

35 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே பருவமழை!

மஹாராஷ்டிராவில் புனே, சதாரா, மும்பை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.புனேவில் உள்ள பாராமதி மற்றும் இந்தாபூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மஹாராஷ்டிராவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு, முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மே 26ம் தேதி ரோஸி, மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த மூன்று நாட்களாக ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மேற்கு மஹாராஷ்டிராவில், புனே, கோலாப்பூர், சதாரா மற்றும் அகமதுநகர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

dev
மே 26, 2025 12:44

கேரளால ரெட் அலர்ட் எச்சரிக்கையா மல்லு மக்களே டேக் கேர்


S.SankaraNarayanan, Nellai
மே 26, 2025 12:40

கேரளாவில் என்ன தான் மழை பெஞ்சாலும் ரோடில் தண்ணீரே தேங்கது. நம்மூர் அரசியல்வாதிகள் அறியனும்


Nada Rajan
மே 26, 2025 12:22

மாநகராட்சியினர் உஷாராக இருக்க வேண்டும்


புதிய வீடியோ