உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,: 'தேசிய பாரம்பரிய சின்னமான, விஜய வரதராஜப் பெருமாள் கோவிலை பாதுகாக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் முனைப்பு காட்டாதது துரதிருஷ்டவசமானது. கோவில் தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாக பின்பற்றாவிட்டால், அறநிலையத் துறை கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்' என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டை கிராமத்தில் உள்ள, ஸ்ரீ விஜய வரதராஜப் பெருமாள் கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், வடகலை வைணவ சம்பிரதாயப்படி, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2020ல் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, வழக்கறிஞர் பி.ஜெகந்நாத், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கறிஞர் ஜெகந்நாத் ஆஜராகி, ''பழமையான கோவில், தற்போது மிகவும் சிதிலமடைந்து வருகிறது. கோவிலை சுற்றி முட்செடிகள் முளைத்து, புதர் மண்டியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை கோவில் கும்பாபிஷேகம் நடக்கவில்லை,'' எனக் கூறி, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.இதை பார்த்த முதல் பெஞ்ச், ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர், பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டது; மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது.வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, அறநிலையத் துறை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர் ஆஜரானார். அறநிலையத்துறை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, 'கோவில் முழுமையும் ஆய்வு செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் சீரமைக்கும் பணிகள் துவக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்டு, அது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும்' என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படியிருந்தும், இந்த விஷயத்தை, ஹிந்து அறநிலையத்துறை அலட்சியத்துடனும், மந்த கதியிலும் செயல்பட்டுள்ளது. இது ஏமாற்றம் அளிக்கிறது.மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்க்கும்போது, கோவில் குளம், வசந்த மண்டபம், மிகவும் சிதிலமடைந்துள்ளது தெரிகிறது. கோவிலின் பிரதான கோபுரத்தில், செடிகள் வளர்ந்துள்ளன. இக்கோவில், பழமையான பாரம்பரிய நினைவு சின்னமாகும். இது, பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசார நினைவு சின்னங்கள், தேசிய சொத்தாகும். இதை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும், பொது மக்களுக்கும் உள்ளது.பிரிட்டனில் உள்ள, 'ஸ்டோன் ஹெஞ்ச்' எனப்படும் கல்வட்ட சின்னம், ராஜஸ்தானில் உள்ள 'மவுண்ட் அபு' ஆகிய வரலாற்று சின்னங்கள், நன்கு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.பிரிட்டனில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச், சுற்றுலா தலமாக மாறியுள்ளது. அதன் வாயிலாக, வருவாய் கிடைக்கிறது.ராஜபுத்திரர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக, 'மவுண்ட் அபு' உள்ளது. மலை உச்சியில், ஜெயின் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் அழகு மிக்கவை. இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன.மனுதாரர் கூறும் கோவிலும், தேசிய பாரம்பரிய சின்னமாகும். அத்தகைய கோவிலை பாதுகாக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது துரதிருஷ்டவசமானது.கோவில் உள்ளிட்டவை தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாக பின்பற்றாவிட்டால், அறநிலையத் துறை கமிஷனரை நீக்கம் செய்யும்படியும், இணை ஆணையருக்கு, எந்தவித பதவி உயர்வும் வழங்ககூடாது என்றும், உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.எனவே, உடனே அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலை ஆய்வு செய்து, பணிகளை துவக்க வேண்டும். மேலும், புதர்களை அகற்ற வேண்டும். பணிகள் நடந்துள்ளதா என்பதை, மனுதாரர் நேரில் சென்று, புகைப்படங்கள் எடுத்து, நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கலாம்.விஜய வரதராஜ பெருமாள் கோவிலில் இதுவரை நடந்துள்ள சீரமைப்பு பணிகள் என்ன, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்து, அறநிலையத்துறை கமிஷனர் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Barakat Ali
நவ 21, 2024 09:40

கோவில் வேண்டாமென்று சொல்லவில்லை ..... கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம் ..... இந்த வசனத்தை வெச்சுதான் தமிழனை மூளைச்சலவை செஞ்சு ஆரியர்களை ஒடுக்கினோம் ...... இப்போ நாங்களே அதை வெற்றிகரமா, சொல்லப்போனா அவங்களை விட வெறித்தனமா செஞ்சுக்கிட்டு இருக்கோம் ...... இதுதான் திராவிடியாள் மாடல் .....


sankaranarayanan
நவ 21, 2024 09:23

கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கைவிட்ட உயர்நீதி மன்றம் சற்றே யோஜிக்க வேண்டும் கமிஷனர் வருவார் போவார் அவருடைய பதவி இருக்கும் வரையில்தான் அவர் அங்கே ஆட்சி செய்ய முடியும் ஆனால் அவர்களின் இலாக்கா அமைச்சர் என்ன செய்கிறார் அவர் ஏன் அந்த தவறுக்கு பொறுப்பாகக்கூடாது ஆதலால் முதலில் கணம் நீதி அரசர் முதலில் அந்த துறை அமைச்சரை தகுதி நீக்கம் செய்ய உத்திரவு போட்டுவிட்டு கமிஷனர் மேல் தக்க நடவடிக்கை எடுத்தால்தான் நல்லது அமைச்சர் சொல்படித்தான் கமிஷனர் செயல்படுவார் இது நியதி


Ethiraj
நவ 21, 2024 08:45

Officials politicians who are non believer of God must not be allowed in HRCE


Baskar
நவ 21, 2024 08:00

யாருக்கு வேலை போகும் ? கமிஷனர் ,அப்பாடா நான் என்னமோ அமைச்சருக்கு தான் பதவி போய்டும் பயந்துட்டேன்


R VENKATARAMANAN
நவ 21, 2024 07:12

HR&CE should be abolished in total and all Hindu temples should released from the ruling parties, especially the present DMK. That is the only way to Hindu and Hindu temples. Further, no ruling party should be allowed to come anywhere near the Hundi collections of the Hindu Temples. All collections should be used only for the maintenance of the temple


SKFABRICATION 11
நவ 21, 2024 07:01

இந்த திராவிட மாடல்கள் 1000 கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்று சொல்லி பித்தலாட்டம் செய்கிறான்.இந்த நிகழ்வுகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலமாக நடைபெற்றது ஆனால் பெயர் மட்டும் இவர்களுக்கு. ஸ்டிக்கர் மாடல்.


sridhar
நவ 21, 2024 07:53

அது mattum அல்ல , பொய் கணக்கு எழுதி கோவில் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு தான் கும்பாபிஷேகம் . நம்மிடம் நூறு ருபாய் பிடுங்கி நமக்கு ஒரே ஒரு கப் டீ வாங்கித்தருபவனை நல்லவன் என்று நம்பும் ஹிந்துக்கள் தான் நம் பலவீனம் .


raja
நவ 21, 2024 07:01

ஹையோ ஹையோ திருப்பதி பெருமாள் கோயில் உண்டியலுக்க கு காவல் எதுக்குன்னு கெட்ட திருட்டு கூட்டத்திடம் போய் கோயிலை பராமரி என்றால் அவங்களுக்கு புறங்கை நக்க நீங்களே வழி ஏற்படுத்தி கொடுக்குறீங்கள் எஜமான்...


sridhar
நவ 21, 2024 06:06

விசாரணை , ஒத்திவைப்பு , மீண்டும் விசாரணை , ஒத்திவைப்பு , எச்சரிக்கை , கடும் எச்சரிக்கை. இதை தாண்டி நீதிமன்றங்கள் செல்லாது என்பதை இந்த ஹிந்து விரோத திராவிட மாடல் அரசு புரிந்து வைத்துள்ளது . கூட்டம் கூட்டமாக கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் மனசாட்சி இன்றி ஆட்டுமந்தைகள் போல் ஹிந்து விரோதிகளுக்கு உள்ளூர் தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை வரிந்து கட்டிக்கொண்டு வாக்களிப்பது கொடுமை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு சராசரி கிறிஸ்துவன் , முஸ்லீம் தன் மதநம்பிக்கையை இழிவுபடுத்தும் கட்சிக்கு வாக்களிக்கமாட்டான். ஹிந்துக்களுக்கு சொரணை கம்மி தான்.


Kasimani Baskaran
நவ 21, 2024 05:59

கோவிலை நிர்வாகம் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால் இதைப்பற்றி நீதிமன்றம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கேவலமாக இருக்கிறது.


M S RAGHUNATHAN
நவ 21, 2024 05:48

எஜமான் சும்மா பூச்சி காட்டாதீர்கள். HRCE யாவது கமிஷனராவது யாரும் உங்கள் உத்தரவை மதிக்க மாட்டார்கள். அடுத்த முறை மீண்டும் ஒரு கண்டனம். இந்த முறை வேறு கமிஷனர் இருப்பார். HRCE சட்டத்தை எத்தனை கமிஷனர், இணை, துணை,உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் நன்கு படித்து இருக்கிறார்கள் என்று சோதனை செய்யவும். சட்டத்தை மீறுவதற்கென்று ஒரு துறை உண்டு என்றால்.அது HRCE தான். புரியாதது மாதிரி நீதிமன்றங்கள் இருக்கிறது.


சமீபத்திய செய்தி