உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.பி.எஸ்., சீட் அதிகரிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

எம்.பி.பி.எஸ்., சீட் அதிகரிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை: புதிதாக மருத்துவ கல்லுாரிகள் துவங்குவதற்கும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிக்க, ஜனவரி 4ம் தேதி வரை, தேசிய மருத்துவ ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.

ஆணையம் அறிக்கை:

எதிர்வரும், 2025 - 26ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பதற்கும், புதிய கல்லுாரிகளை துவங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அதை நீட்டித்து, 2025 ஜனவரி 4ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆணைய விதிப்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். நேரடி ஆய்வு வாயிலாக மதிப்பீடு செய்யப்பட்டு, அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சான்று, இணைப்பு கல்லுாரி ஒப்புகை சான்று, மருத்துவமனை விபரங்கள், கல்வி கட்ட விபரங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை