உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருத்தம், சங்கடம் இருந்தாலும் தி.மு.க. கூட்டணியில் தொடருவோம்; துரை வைகோ

வருத்தம், சங்கடம் இருந்தாலும் தி.மு.க. கூட்டணியில் தொடருவோம்; துரை வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., கூட்டணியில் வருத்தம், சங்கடம் இருந்தாலும் அதில் தொடருவோம் என்று ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ கூறி உள்ளார்.ம.தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நாளை (ஜூன் 22) நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 1700 பேர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இன்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; 7 ஆண்டுகள் முடிந்து 8வது ஆண்டாக தி.மு.க., கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி என்னும் போது ஒரு பொதுவான நோக்கம் இருக்கும். அதனால் தான் கூட்டணியில் கட்சிகள் சேருகின்றன. நாங்களும் அதே அடிப்படையில் மதவாதத்தை எதிர்க்கும் நோக்கத்தில் அணியில் இணைந்துள்ளோம்.அந்த கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். கூட்டணியில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் எல்லாருக்கும் திருப்தியாக இருக்குமா என்றால் இருக்காது. எங்கள் இயக்கம் மட்டுமல்ல, பிற இயக்கங்களும் கேட்பது கிடைக்காது இருக்கலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு கூட்டணியில் பிளவு, இவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறக்கூடாது. பலமுறை இந்த கூட்டணியில் ம.தி.மு.க., தொடர்கிறது என்று சொல்லி இருக்கிறோம். தமிழகத்தை பொறுத்த வரை இண்டி. கூட்டணி வலுவாக இருக்கிறது. ம.தி.மு.க.,வை பொறுத்தவரை, எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாருக்கும் அதிக சீட்டுகள் வரணும், குறைந்த பட்சம் 12 சீட்டுகளில் நின்றால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த ஆசை எங்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒரு கூட்டணி ஏன்னும் போது, பல இயக்கங்கள் ஒன்று சேரும் போது அந்த கால கட்டத்தில் இருக்கும் நெருக்கடிகளில் எங்களுக்கு மட்டும் என்று இல்லை, கூட்டணி தலைமைக்கும் இருக்கிறது. பொதுவான நோக்கம், கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக சமரச நிலை ஏற்படும். பொதுக்குழுவில் எங்கள் கருத்துகளை சொல்வோம். தலைமை பின்னர் முடிவெடுக்கும். எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இந்த கூட்டணியில் ஏதேனும் விரிசல் விழாதா என்று எதிர்பார்க்கின்றனர். ஒரு தேர்தல் களத்தை பொறுத்த வரை, வலு பெறுவதும் எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்வதும் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு. கூட்டணியில் எங்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது, சங்கடங்கள் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் கூட்டணியில் தொடரும். 3 முறை மத்திய அமைச்சர் வாய்ப்பு வந்த போதும் வேண்டாம் என்று சொன்னவர் வைகோ . ஆகையால் தி.மு.க., கூட்டணியில் ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணி மாறமாட்டோம். எனவே நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம். குறைந்த தொகுதிகள் தந்தால் கூட்டணியில் இருப்பீர்களா? இல்லையா? என்று கேட்கலாம். எங்களை பொறுத்தவரைக்கும் ம.தி.மு.க., அந்த மாதிரி ஒரு நிலைப்பாடு எடுக்காது. நாங்கள் எதிர்பார்ப்பது தன்மானம், சுய மரியாதை. அதற்கு பாதகம் வந்துவிடக்கூடாது என்றுதான் எங்களின் விருப்பம். சீமானை பொறுத்தவரைக்கும் அவர் பேசுவதாக இருக்கட்டும், செய்வதாக இருக்கட்டும், வித்தியாசமாக செய்கிறார். ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டும். ஆட்சியில் பங்கு என்று சொல்வது பல குழப்பங்களை உருவாக்கும் என்று நான் சொல்வேன். அது ஒரு நல்ல விஷயம் தான். ஒவ்வொரு இயக்கத்துக்கும் குறைந்த பட்ச செயல்திட்டங்கள் என்பது இருக்கும். அதை நிறைவேற்ற, செயல்படுத்த ஆட்சியில் பங்கு என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த தருணத்தில் ஆட்சியில் பங்கு என்து பல குழப்பங்களை தரும் என்பது எனது அனுமானமாக இருக்கிறது. ஆங்கிலம் இல்லாத ஒரு பாரதம் உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா கூறுவது சாத்தியமா என்று நான் கேட்கிறேன். பல்வேறு துறைகளில் நமது தமிழக மாணவர்கள் கோலோச்சுகின்றனர் என்றால் அதற்கு ஆங்கில மொழி புலமை தான் காரணம். இது எப்படி வந்தது என்றால் இருமொழிக் கொள்கையால் தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Indhuindian
ஜூலை 21, 2025 10:39

எவ்வளோ அடிச்சாலும் தங்கராண்டா இவன் ரொம்ப நல்லவன்டா - வடிவேலு காமடி


Mud Basheer
ஜூலை 13, 2025 07:06

அடிக்கடி இல்லாததை சொல்லும் உதய நிதி போலெ ....இல்லாதவன்.


M Ramachandran
ஜூன் 23, 2025 00:19

மதவாதம் இது இப்போ புளித்த மாவு. போலி மற்றும் ஓட்டுக்காக செய்யும் பித்தலாட்டம் என்று தேளிந்து முஸ்லீம்களே இதை விரும்பு வதில்லை. அவர்களும் தேசியா நீரோட்டத்தில்கலந்து கொண்டு விட்டார்கள். உ.பி. பிஹார் போன்ற பெரியமாநிலங்கலேயெ அவர்கள் பாஜா விற்கு தங்கள் வாக்குகளை செலுத்தி பதவியில் உட்கார வைத்துள்ளார்கள். பெரியாரிடம் ஆனைச்சாம் என்பதெல்லாம் பழையா பித்தலாட்ட கதைய்ய


panneer selvam
ஜூன் 22, 2025 00:55

Durai , you know being a beggar , you do not any choice except to stand in queue with begging bowl at Arivalayam gate


theruvasagan
ஜூன் 21, 2025 22:08

வருத்தப்படாத வக்கத்தவனுங்க சங்கம். மூஞ்சி மேல காறி உமிழ்ந்தாலும் தொடச்சுப் போட்டுட்டு அவன்கிட்டயே கையேந்தி நிக்கிற மானஸ்தன்கள் சங்கம்.


திகழ்ஓவியன்
ஜூன் 21, 2025 22:01

இப்படி நீ VCK காங்கிரஸ் கமீஸ் எல்லாம் புலம்பி கொண்டு இருங்க , கடைசி நேரத்தில் உங்களை எல்லாம் ஸ்டாலின் கழட்டி நடு தெருவில் நிற்க வைக்க போகிறர் , மகளிர் உரிமை தொகை , இலவச பஸ் , தவபோதல்வன் புதுமை பெண் என்று திட்டமே போதும் வெற்றிக்கு


krishna
ஜூன் 22, 2025 01:33

THIKAZH OVIYAN 200 ROOVAA COOLIE KUDUKKA AARAMBICHAACHA UNAKKU.DHIDIR ENA MUTTAL THANAMAA KARUTHUVAANDHI EDUTHU KADHARRA.DESA VIRODHA MAFIA DRAVIDA MODEL KUMBAL THANIYAA NINNA SURAA OOTHIKKUM.


Rajan A
ஜூன் 21, 2025 21:41

நாஞ்சில் சம்பத் சொன்னது ஞாபகம் வருகிறது. துடைச்சிட்டு போய் கொண்டே இருப்பார்கள்


Ramesh Sargam
ஜூன் 21, 2025 21:30

வருத்தம், சங்கடம் இருந்தாலும், வெட்கம், மானம், மரியாதை எதுவும் இல்லை. ஆகையால் திமுக கூட்டணியில் தொடருவோம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 21, 2025 21:17

போக்கிடம் இல்லாத கும்பல் இது. வாய் மட்டும் ஒன்ரே கிலோ மீட்டர்.


மோகன்
ஜூன் 21, 2025 20:53

நாங்கள் சூடு சொரணை இல்லாதவர்கள் என்பதை நாசூக்காக சொல்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை