உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செக் மோசடி வழக்கில், ம.தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு ஆண்டு சிறை

செக் மோசடி வழக்கில், ம.தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு ஆண்டு சிறை

சென்னை: காசோலை மோசடி வழக்கில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் தனி தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் டி.சதன் திருமலைக்குமார்.கடந்த 2016 மார்ச்சில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, 'நியூ லிங்க் ஓவர்சீஸ் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்திடம், தொழில் அபிவிருத்திக்கு என முதல் கட்டமாக, 51 லட்சத்து 9,212 ரூபாயும்; இரண்டாம் கட்டமாக, 80 லட்சத்து 59,107 ரூபாயும் கடனாக பெற்று உள்ளார். இதில், குறிப்பிட்ட தொகையை தவணையாக அவர் திருப்பி செலுத்தி வந்துள்ளார். மீதமுள்ள கடன் தொகைக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளை நிதி நிறுவனத்திடம் சதன் திருமலைக்குமார் வழங்கி உள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் நிதி நிறுவனம் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து, சதன் திருமலைக்குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு, நிதி நிறுவனம் தரப்பில் அதன் இயக்குநரால் 2019ல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. எம்.எல்.ஏ., என்பதால், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின், சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை, 3வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் முன்னிலையில் நடந்து வந்தது. நிதி நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் எம்.சின்னதம்பி ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் நேற்று பிறப்பித்த தீர்ப்பு: காசோலை மோசடி வழக்கில், சதன் திருமலைக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படுகிறது. மேலும் 3 மாதம் மேலும், கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாயை, இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்ய இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

எம்.எல்.ஏ., பதவி பறிபோகும்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் எட்டாவது பிரிவின்படி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல், ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, தீண்டாமையை பின்பற்றுதல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் போன்ற வழக்குகளில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு அபராதம் விதித்தாலே, ஆறு ஆண்டுகளுக்கு தகுதி இழப்பு ஏற்படும். தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால், மற்ற குற்றங்களை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி உடனே தகுதி இழக்கிறார். அத்துடன் ஆறு ஆண்டு களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு வேளை, தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்குகளில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் தடை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதியின் தகுதி இழப்பு நீங்கி பதவியில் நீடிக்கலாம். அந்த வகையில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார், தகுதி இழப்பை எதிர்கொண்டுள்ளார். ஒரு வேளை, மேல்முறையீட்டு வழக்கில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் தடை உத்தரவை பெற்றால் மட்டுமே பதவியில் அவர் நீடிக்கலாம். இதேபோல அவதுாறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, எம்.பி. பதவியில் அவர் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rathna
டிச 31, 2025 14:23

பெட்டி அரசியலுக்கு பெயர் போன அரசியல் கட்சி நபரின், கையை விலங்கு கட்டி அழைத்து செல்லும் நிலையா? நீதியை இம்பீச் செய்வோம்..


kjpkh
டிச 31, 2025 13:14

வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது அவருக்காக உயிர் நீத்த ஆறு பேர்களின் ஆவி வைகோவை இந்த பாடு படுத்துகிறது.


kjpkh
டிச 31, 2025 13:00

கழுத்து நரம்பு புடைக்க பேசும் வைகோவின் கருத்து என்ன.


vee srikanth
டிச 31, 2025 12:59

இப்படி ஒரு MLA இருக்காரா? சட்ட சபையில் பார்த்தா மாதிரி தெரியலையே


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2025 10:04

தாய்க்கழகத்தில் இருந்து வந்த பழக்கம் ..... விடமுடியுங்களா >>>>


Sesh
டிச 31, 2025 09:40

மேலும் 3 மாதம் மேலும், கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாயை, இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அப்படியென்றால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்திட்டு 1 கோடி ரூபாயை தரவேண்டாமா ?. கோர்ட் / அரசு அந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கமா . விளக்கம் தேவை.


D Natarajan
டிச 31, 2025 07:42

குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது . எதற்கு மேல் முறையீடு. நீதி துறை சீர்கெட்டு, கேடுகெட்ட நிலையில் உள்ளது. மிக மோசம்.


Palanisamy Sekar
டிச 31, 2025 06:09

எப்போ பார்த்தாலும் கருப்பு கவுனும், கையில் நாலு கட்டுப்பேப்பரும் இருக்குற மாதிரி கோர்ட்டில் கர்ஜிக்கும் சிங்கமாக வாயை திறந்து வாதாடுபவராக காட்சி தருகின்ற வைகோ என்கிற மாபெரும் வக்கீல் இருந்துமா இவருக்கு தண்டனை கிடைத்தது? அய்யகோ இது தீர்ப்பே அல்ல. வைகோவை வாதாட அழைத்திருந்தால் இந்நேரம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பாரா இந்த நீதியரசர்? ஒன்னும் குறைச்சலில்லை பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவந்து இந்த நீதியரசரை நீக்கிவிடலாம். சங்கி நீதியரசர் என்று பேட்டியில் வைகோவை விட்டு கர்ச்சிக்க சொல்லிடுவோம். ஸ்டாலினிடம் கையெழுத்து வாங்கி அதில் ஏதாவது எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிடுவோம். திமுகவில் சரி மதிமுகவிலும் சரி ஒருத்தர் கூட சிறை சென்றிடவே கூடாது. அப்படி நடந்துவிட்டால் நம்ம கருணாநிதிக்கு ஆத்மா துடிதுடித்துவிடும்


kathirvadivel nidyanandan
டிச 31, 2025 07:29

சரியாக சொன்னீர்


Mani . V
டிச 31, 2025 05:09

இதென்னடா உலகின் ஒரே உத்தமமான தலைவன் சைக்கோவுக்கு ஸாரி வைக்கோவுக்கு வந்த சோதனை? விடுங்க பாஸ், இருந்தாலும் நீங்கள் அடைப்பு எடுக்கும் வீட்டின் முதலாளியான "அப்பா" என்ன விலை கொடுத்துனாலும் நிதியை ஸாரி நீதியை வாங்கி விடுவார்.


Kasimani Baskaran
டிச 31, 2025 04:36

இதெல்லாம் சரியல்ல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை