உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகதாது விவகாரம்: தி.மு.க., - பா.ஜ., மோதல்

மேகதாது விவகாரம்: தி.மு.க., - பா.ஜ., மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்: ''உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ, மேகதாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இது குறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் துாண்டுதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார். பின் அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி, மாயனுார் தடுப்பணையை கட்டினார். பின் தடுப்பணைக்கு பதில் மோகனுார் உள்ளிட்ட இடங்களில் கதவணைகள் கட்டப்பட்டன.ஏரி, குளங்களை நிரப்ப, தற்போது நடவடிக்கை இல்லை. உபரி நீரை ஏரியில் நிரப்பும் திட்டத்தை கிடப்பில் போடவில்லை. அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஓரிரு மாதங்களில் செயல்படுத்தப்படும். கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் மேகதாது அணையை கட்ட விடவே மாட்டோம். மேட்டூர் உபரி நீரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு போட்டுவிட்டு, தற்போது உபரி நீர் வீணாவதாக கர்நாடக அரசுகூறுவதை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ, மேகதாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் துாண்டுதல் என சந்தேகம் ஏற்படுத்துகிறது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி நீரை பயன்படுத்தி நீர் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, அந்த மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, முதல்வரிடம் எடுத்துரைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
ஆக 04, 2024 19:33

தலிய்ய தப்பியதெ என்று நிம்மதி கொண்டு ஒதுங்கி நிம்மதியாக இருக்க பாருங்கள். மறந்த விஷயங்கள் மாரு படியும் விஷ்வ ரூபம் எடுக்க போகிறது. வெராண்டாத விவா கரத்தில் தலையிட்டு மாட்டி கொள்ளாதீர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் தன கை பாவயான போலீசை கொண்டு கொள்ளையடித்த சம்பந்தமான ஆவணகளை திருடி காப்பாத்த முடியாது


Ramesh Sargam
ஆக 04, 2024 13:40

ஏன் எப்பொழுதும் மத்திய அரசை குறைக்கூண்டு திரிகிறாய்? டெல்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து பேசவேண்டும். அங்கு சென்று அவர்கள் பேசுவது புரியவில்லை என்று புலம்புகிறாய். அவர்கள் பேசுவது உனக்கு புரியாவிட்டாலும், உன்னுடன் வரும் அதிகாரிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்கும். அவர்களிடம் மத்திய அமைச்சர் என்ன பேசுகிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கு திரும்பி ஏதாவது பதில் கூறவேண்டுமென்றால் உன்னுடன் வரும் அதே அதிகாரிகளிடம் கூறி மத்திய அமைச்சருக்கு பிரச்சினையை கூறவேண்டும். இப்படி செய்யாமல், சும்மா ஒப்புக்கு டெல்லி சென்று வந்துவிட்டு, அவர்கள் பேசுவதே புரியவில்லை என்றால், எதற்கு மேலும் அமைச்சர் பதவியில் நீ தொடரவேண்டும்.


nagendhiran
ஆக 04, 2024 11:20

தடை செய்யல்லைனா பதவி விலக சொல்லுங்க?


N.Purushothaman
ஆக 04, 2024 10:43

மணல் கொள்ளையில் இந்த ஆள் மீது இன்னமும் நடவடிக்கை விரைவுபடுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது ..அரசியல் ரீதியாக கொள்ளையடித்து சொத்து சேர்த்தவனை எல்லாம் சட்டம் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது கேவலத்தின் உச்சம் .


xyzabc
ஆக 04, 2024 10:22

I speak lie and nothing but lies. Obeying the concept of dravidam.


tmranganathan
ஆக 04, 2024 08:23

பொய்களை அவிழ்த்துட்டு திமுகவை காப்பாத்துகிறார். மணல் கொள்ளை தலைவர் துரை யோகியாரா?


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 07:50

நான் வெறும் துரைமுருகன்தான் ... நீங்க டி துரைமுருகன் கிட்ட சொல்லுங்க ன்னு ஒரே போடா போட்டுடுவாரு .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 07:49

மீண்டும் கர்நாடகாவில் நம்ம ஆட்சி வரணும் என்பதால் பாஜக கர்னாடக மக்களைப் பகைக்க விரும்பலை ...... அங்கே டீம்கா தலைகள் சிலரின் குடும்ப உறவுகள், வாங்கிப்போட்ட சொத்துக்கள் இருப்பதால் டீம்காவும் தயங்குது ..... மொத்தத்தில் தமிழனுக்கு அல்வா நிரந்தரம் ..... ஆம்ஸ்ட்ராங்கை கட்சி வேறுபாடு இல்லாமே சேர்ந்து போட்டமாதிரி இது எல்லோரும் சேர்ந்து கொடுக்குற அல்வா ..... மோடி கிட்டே போனீங்கன்னா உட்கார்ந்து பேசுங்க ....


Just imagine
ஆக 04, 2024 07:39

ஒத்த செங்கல் திருடன் கிட்ட சொல்லி ... மொத்த செங்கல்களை ஆட்டைய போட்டால் ... மேட்டர் ஓவர்.


Apposthalan samlin
ஆக 04, 2024 11:11

வெட்கமா இல்லை இன்னும் எய்ம்ஸ் அரமிக்கவில்லை தமிழ் நாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கே துரோகம்


Duruvesan
ஆக 04, 2024 11:54

எய்ம்ஸ் அலோட்மென்ட் குடுத்து பிள்ளைகள் இப்போ வேற காலேஜ் ல படிக்குது.


Ravi Manickam
ஆக 04, 2024 07:27

பகுத்தறிவிர்க்கு பஞ்சம் உள்ள இந்த ...களிடம் உள்ள ஒரே ஒரு கேள்வி, கர்னாடகாவில் முந்தய பாஜக ஆட்சியில் காவிரி பிரச்சனையே இல்லாம் இருந்ததே அது எப்படி? மக்களையும், கட்சி தொண்டர்களையும் முட்டாள்கள் என நினைத்து பேசும் ஈனப்பிறவிகள்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ