உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு தோல்வி அடைந்தோருக்கு மனநல ஆலோசனை இன்று துவக்கம்

நீட் தேர்வு தோல்வி அடைந்தோருக்கு மனநல ஆலோசனை இன்று துவக்கம்

கோவை: 'நீட்' தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் திட்டம், சென்னையில் இன்று துவங்குகிறது.கோவை அரசு மருத்துவமனையில், பல்வேறு திட்டங்களை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நான்கு ஆண்டுகளில், 414.13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. நாட்டில், 15 பெண்களில் ஒருவருக்கு, கருவுறுதல் பிரச்னை உள்ளது.கோவை அரசு மருத்துவ மனையில் முதல் நிலை செயற்கை கருத்தரிப்பு மையம், 16.30 லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில், 180 பெண்கள் பரிசோதிக்கப்பட்டு இருவர் கருவுற்றுள்ளனர்.நீட் விலக்கு கோரி, அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வில் முதல் 100 மதிப்பெண்ணில், ஆறு பேர் தமிழகத்தில் உள்ளனர். நீட் தேர்வில் தவறிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை, தொலைபேசி எண், 104 வாயிலாக வழங்கப்படும். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இதுவரை, 32,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விரைவில் கவுன்சிலிங் நடக்க உள்ளது. மருத்துவ துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, 29,000 பேர் எம்.ஆர்.பி., வாயிலாக நியமனம் செய்யப்பட்டனர். நீட் மதிப்பெண்களில் குளறுபடி இருப்பதாக கூறப்படுவது குறித்து, சுகாதார துறை செயலர் வாயிலாக, தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 09:51

அமராவதி: ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வை எதிகொள்ளும் வகையில், இலவச பயிற்சி திட்டத்தை அமைச்சர் நாரா லோகேஷ் துவக்கி வைத்தார்-இதுவும் நமது பத்திரிகையில் இன்று வந்த செய்திதான்


GSR
ஜூன் 16, 2025 09:33

Qualified Psychologists ?


Ram
ஜூன் 16, 2025 07:45

இந்த பயல் நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைப்பது அபத்தம்


VENKATASUBRAMANIAN
ஜூன் 16, 2025 07:29

முதலில் உங்களுக்கு அது தேவை. மாணவர்களை குழப்பி அவர்களை சரியாக படிக்கவிடாமல் செய்து பாழாக்கி விட்டுடு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள். இதுதான் திராவிட மாடல்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 06:58

நீட் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் அருமையான திட்டம், நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்பவர்களை எப்போது மனநல ஆலோசனைகளை வழங்குவீர்கள். நீட் தேர்வில் தன்னம்பிக்கையுடன் கலந்துகொண்டு.. நன்றாக படித்து வெற்றி பெற்ற எதிர்கால மருத்துவர்களுக்கு ...நீட் தேர்வில் தோல்வியடைத்தவர்களுக்கு, இது தற்காலிக தோல்வித்தான் மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றிபெற்றவர்களிடன் கலந்து ஆலோசித்தது ..மீண்டும் முயன்று வெற்றிபெற வாழ்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை