உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

குரூப் 1 உட்பட 3 தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக பொதுப்பணியில் உள்ள சுற்றுலா அலுவலர் பதவியில், மூன்று காலியிடங்களுக்கு, கடந்த ஆண்டு ஜூனில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.குரூப் 1 பதவியில், 95 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஆக., 10ம் தேதி முதல், 13 வரை முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி துறையில், விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பதவியில், 18 காலியிடங்களை நிரப்ப, ஜனவரியில் தேர்வு நடந்தது. இதில், பங்கேற்றவர்களுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை