உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ரூ.10,740 கோடி, மதுரையில் ரூ.11.340 கோடியில் மெட்ரோ: நிலம் எடுக்கும் பணி பிப்ரவரியில் துவக்கம்!

கோவையில் ரூ.10,740 கோடி, மதுரையில் ரூ.11.340 கோடியில் மெட்ரோ: நிலம் எடுக்கும் பணி பிப்ரவரியில் துவக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரையில் ரூ.11.340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி, பிப்ரவரி மாதம் துவங்கும்' என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல் தெரிவித்துள்ளார்.கோவையில் நிருபர்களுக்கு சித்திக் அளித்த பேட்டி: கோவை மாநகராட்சியில் 32 ஸ்டேஷன் 2 வழி தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கி, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். சமீபத்தில் மத்திய அரசு கூடுதல் விவரங்களை கேட்டது. அந்த விவரங்களும் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரையில் ரூ.11.340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

700 பேர் பயணம்

2 ஆண்டுகள் இடங்களை தேர்வு செய்ய ஆகும். இந்த மெட்ரோ திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மெட்ரோ பணிமனை அமைப்பதற்கு 16 ஏக்கர் நிலம் தேவை. வழித்தடம் அமைப்பதற்கு, 10 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். பணிமனை, சக்தி பொறியியல் கல்லுாரி அருகே அமைக்கப்படும். சிறிய பணிமனை ஒன்று, வழியம்பாளையம் பிரிவில் அமையும்.மொத்த திட்டமும் அனுமதி கிடைத்த நாள் முதல் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். கோவை மெட்ரோ ரயிலில் 3 பெட்டிகளில் 700 பேர் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டம் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரி மாதம் தொடங்கும்.

மதுரையில் 32 கி.மீ.,

மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் என்பது 10 அல்லது 20 ஆண்டுகளாக மேற்கொள்வது அல்ல. 150 ஆண்டுகளுக்கான கட்டமைப்பு ஆகும். கோவையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ அமைக்க 16 ஹெக்டேர் நிலம் தேவை. இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மெட்ரோ பாதையில், 30 மீட்டர் இடைவெளியில் ஒரு தூண் கட்டப்படும். கோவையில் அவினாசி ரோடு மேம்பாலம் அறிவிப்பை மனதில் வைத்து திட்டமிடுவோம். மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

m.arunachalam
டிச 24, 2024 22:48

வளர்ந்த நாடுகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரும் பள பளப்பான கட்டமைப்பு மற்றும் அதிகப்படியான வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டு கீழே சென்று விட்டனர் . இங்கும் அந்த நிலைமைதான் வரும் . எளிமையே இனிமை. பள பளப்பான மெட்ரோ தேவையில்லை .


chandrasekar
டிச 24, 2024 21:07

உங்கள் கருத்து 100 சதவீதம் சரியானதே. இதற்கு பதில் இதே வழித்தடத்தில் சென்னை எலக்ட்ரிக் ட்ரெயின் போன்று இயக்கினால் அனைவருக்கும் பயன் கிடைக்கும். செலவும் குறைவாகவே இருக்கும்.


Sathish.s.k Sathish
டிச 24, 2024 19:14

அமைந்தால் மிகச்சிறப்பு


என்றும் இந்தியன்
டிச 24, 2024 17:29

மதுரை AIIMS செங்கல் காண்பித்து பிழைக்கும் உபத்திரவ முதல் அமைச்சர் மறைநிதி இந்த திட்டத்திற்கு என்ன காட்டி பிழைப்பு நடத்த எண்ணுமோ????


periyasamy nanjappan
டிச 24, 2024 17:24

நல்ல தொடக்கம் .


Baskaran R V
டிச 24, 2024 17:05

இந்த இரண்டு நகரங்களுக்கு, மெட்ரோ வசதி தேவையே இல்லை. சென்னை, பெங்களூரு போன்ற மக்கள் தொகை தினம் உள்ள பெரிய நகரங்களில் ஓடும் மெட்ரோ வே இன்னமும் Break Even.. ஐ அடைய முடியாத நிலை தான் உள்ளது. திட்டம் செயல் பாட்டுக்கு வந்த பிறகு, பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆசையில் முதல் ஆறு மாதத்திற்கு கூட்டத்தினை எதிர் பார்க்கலாம். ரூபாய் 40 50,60 என டிக்கெட் எடுத்து படிகள் ஏறி இறங்கி பயணம் செய்ய இளைய சமூகத்தினர் விரும்பலாம் ஒழிய, அனைத்து தரப்பு வயதினரும் , இதனை நல்ல முறையில் உபயோகப் படுத்தினால் அன்றி, கோவை மற்றும் மதுரை மெட்ரோ கார்பொரேஷன் கள் , லாபத்தில் இயங்குவது என்பது கடினமே. இது ஒரு pesimist கருத்து அல்ல.


MARI KUMAR
டிச 24, 2024 16:23

கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்ட மக்கள் மெட்ரோ ரயிலை விரும்ப மாட்டார்கள்


MARI KUMAR
டிச 24, 2024 16:23

கோவை மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகள் தேவை இல்லாதது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை