உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

மேட்டூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று மாலை 6:00 மணிக்கு எட்டியது. இதனையடுத்து, 58 அயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டது.கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. போதிய நீர் இருப்பு காரணமாக கடந்த 12ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pecobihf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.2 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணை இன்று மாலை மாலை 6:00 மணிக்கு மேட்டூர் அணை நிரம்பியது. இதனையடுத்து அணையில் இருந்து 58 ஆயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகு வழியாக வெளியேறியது. உபரி நீர் வெளியேறுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் கலெக்டர் பிருந்தா தேவி சேலம் எம்.பி., செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் அனை பொறியாளர்கள் பார்வையிட்டனர்.கடந்த 67 ஆண்டுகளில் ஜூன் மாதம் மேட்டூர் அணை நிரம்புவது இதுவே முதல்முறையாகும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி எச்சரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூன் 30, 2025 15:04

மேட்டூரில் இருந்து வங்காள விரிகுடா கடல் வரை புதிய பெரிய அணை எதுவும் கட்டுவதற்கு ஏற்ற நிலப்பகுதி இல்லை என்ற புவியியல் அறிவு இல்லாத சங்கிகள் வழக்கம் போல் வந்து ஒப்பாரி வைத்து விட்டுப் போகலாம்!


Udayapan Murugappan
ஜூன் 30, 2025 10:09

இனி வரும் உபரி நீர் எல்லாம் ஈரிக்குமாய் குளங்கள் நிரப்பப்பட்டு கொள்ளிடம் ஆழியார் அணை வரை நீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும் அல்லது அனைத்து தண்ணீரும் கடலில் நேரடியாக கலக்க விடுவார்களா


Thravisham
ஜூன் 30, 2025 06:15

வர்ர நதி நீரையெல்லாம் கடல்ல வீணாக்கிடுங்க அப்புறம் கர்நாடகத்திடம் நீருக்கு பிச்சையெடுங்க. த்ரவிஷன்கள் ஆட்சியில் ஒரு மெகா அணைத்திட்டமும் இல்ல. இத்துப்போன சிலைகளும் மணிமண்டபமும் தான் சாதனை.


bala krishnan
ஜூன் 29, 2025 22:03

கிழக்கு மேற்கு வாய்கால்?


sundarsvpr
ஜூன் 29, 2025 20:56

கடலில் கலக்கும் உபரி நீரை சேமிக்க ஊர்களில் உள்ள சிறிய கண்மாய் ஏரி குளங்கள் சீரமைக்க நடவடிக்கை மிகவும் தேவை .


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 29, 2025 20:52

காவேரி வெள்ளம். ஆனால் இங்கே பாலாற்றில் வறட்சி. நதி நீர் இணைப்பு கனவு மட்டுமே.


S Sekar
ஜூன் 29, 2025 20:41

ஒவ்வொரு வருடமும் இதே போல் தண்ணீரை வீணாக்குகிறோம். இதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 18:59

இன்னும் காவிரி துணைநதிகள், வாய்க்கால்கள், குளங்களில் தூர் வாரி முடிக்கவில்லை. ஆக இத்தனையும் கடலுக்கு போகும். குறுவை தொகுப்பு எங்கே என விவசாயிகள் கேட்பது அரசின் காதுகளில் விழவில்லை?


Mani . V
ஜூன் 29, 2025 18:25

மணல் திருடர்கள்: அய்யோ, அய்யய்யோ மணல் திருட முடியாதே.