உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும்!

 மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும்!

சென்னை: ''மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:* அ.தி.மு.க., சேகர்: ராஜவாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக தான் வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 15 நாட்கள் அடிப்படையிலாவது தண்ணீர் திறக்க வேண்டும்.அமைச்சர் ஆனந்த்: சேலம், மேட்டூர் அணையில், 82.7 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் 26க்குள், 9 டி.எம்.சி., தண்ணீர் வரும் என எதிர்பார்க்கிறோம். முதல்வர் மற்றும் துறை அதிகாரிகளுடன் பேசி, விரைவில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னையில் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு, நீர்நிலைகள் துார்வாரும் பணி, 42 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. மாநிலம் உள்ள நீர்நிலைகள் புனரமைப்புக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், ரோட்டரி கிளப் வாயிலாக, 700 ஏரி, குளங்கள் துார் வாரப்படுகின்றன.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kulanthai kannan
ஆக 20, 2026 16:59

நாம் மட்டும் பொறுத்திருந்து நீர் திறப்போம், ஆனால் கர்நாடக உடனே திறக்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு போவோம்.


S.V.Srinivasan
ஆக 20, 2026 12:10

டெல்டா பகுதி விவசாயிகளின் பயிரெல்லாம் காஞ்சு கருவாடு ஆயிடுச்சு. இனி நீங்க தண்ணீர் தொறந்து விட்டா என்ன தொறந்து விடாட்டி என்ன.


Diraviam s
ஆக 20, 2026 11:02

அடுத்த வருடம் வறட்சி நிலவும் என்று கணிப்பு. தூர்வாரும் பணிகளை இப்போதே திட்டமிடலாம்.


V RAMASWAMY
ஆக 20, 2026 09:22

அணை திறப்பிதிருக்கட்டும், இயற்கை அள்ளித்தான் நீர் வழங்குகிறது கொட்டித்தீர்க்கும் மழை மூலம். வல்லுநர்களைக்கொண்டு ஆங்காங்கே நீர்த்தேக்கம் அமைத்து வீணாகும் நீரை சேமிக்க புதிய அரசு முயல வேண்டும். காவிரி நீர் கர்நாடகாவிலிருந்து வந்தவுடன் அது கடலில் கலந்து வீணாவதையும் தடுப்பணை மூலம் கட்டுப்படுத்தவேண்டும். கர்நாடக அரசு சொல்லும் ஒரு குற்றச்சாட்டு, தமிழகத்திற்கு திறந்து விடும் நீர் கடலில் கலந்து வீணாகிறதென்பது. உண்மையில் கர்நாடகாவில், குறிப்பாகாக பெங்களூரில் பலப்பல இடங்களில் அபார்ட்மெண்டுகளுக்கும் தனி வீடுகளுக்கும் போதிய காவிரி நீர் சப்ளை கிடையாது.


dandanakka
ஆக 20, 2026 08:38

ஆமா பஞ்சாயத் முடிஞ்சுபோச்சு.... காவேரில தண்ணி வந்தாச்சு... போங்க போங்க...


sankaranarayanan
ஆக 20, 2026 01:06

வடகிழக்கு பருவ மழை வருமுன் இப்போதிலிருந்தே ஏறி கால்வாய்கள் நதிகளை தூர் வார ஆரம்பியுங்கள் திராவிட மாடல் அரசை போன்று மழை ஆரம்பித்த பிறகு தூர் வாருகிறோம் என்ற பெயரில் பல கோடி மக்கள் பணத்தை சுருட்டப்படாமல் உண்மையாகவே தூர் வாரி மழைவரு முன் முடித்து விடுங்கள் அப்போதாவது அந்த மழை தண்ணீர் சேகரிப்படுமா என்று பார்க்கலாம் பணத்தை தூர் வருகிறோம் என்ற பெயரில் சேகரிக்காமல் மழை தண்ணீரை உண்மையில் சேகரிக்க ஆயத்தப்படுங்கள் மக்களுக்கு பயன்படும்


சமீபத்திய செய்தி