உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை நீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்: நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேஆர்எஸ் அணையில் இருந்து இன்று இரவுக்குள் 1.2 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. நடப்பாண்டில் 4வம் முறையாக நேற்று முன்தினம் ( ஜூலை 25) அணை நிரம்பியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போதைய நிலையில் 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. ஆனால், தற்போது நீர் வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனையடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியும்18 கண் மதகு வழியாக வினாடிக்கு 82 ஆயிரம் கன அடியும்கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்காக 400 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.இதனையடுத்து, இதனையடுத்து காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஒகேனக்கல்லில் குளிக்க தடை

இதனிடையே, தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 88 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அறிவுரை

இதனிடையே அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை முறை சார்ந் குளங்கள்,ஏரிகள் மற்றும் சர்பங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு, நீரை முடிந்த அளவு சேமிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையானது கடந்த நான்கு பாசன ஆண்டுகளில் 2021- 2022, 2022-2023, மற்றும் 2024- 2025 ல் முழு கொள்ளவை எட்டி உள்ளது. கடந்த 2024- 2025ம் ஆண்டில் ஜூலை 30, ஆக.,12 மற்றும் டிச.,31 ஆகி யநாட்களில் முழு கொள்ளவை எட்டியது. இந்த ஆண்டில் ஜூன் 29, ஜூலை 05, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுகொள்ளவை எட்டியது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V.Mohan
ஜூலை 27, 2025 22:49

என்னென்ன பேசினீங்க. திராவிட விஷ விடியல் தலைமையும் அதன் அடிவருடிகளும் சேர்ந்துகிட்டு - அதை செஞ்சோம் இதை செஞ்சோம்னு புள்ளிவிபரம் தர்றீங்களே நாலு வருடமா ஆட்சி நடத்தி என்ன சாதிச்சீங்க??? உடஞ்ச கல்லணை தடுப்பணை சூப்பரா கட்டினீங்க. அது புடுங்கிகிட்டு போயிருச்சி. 60,000 கன அடி, 1 லட்சம் கன அடின்னு தண்ணி வந்தாக்க சேமிக்கறத்துக்கு புதுசா தடுப்பணை கட்ட முயற்சி எடுக்கக்கூட மனசில்லாம இருக்கீங்களே அப்புறம் என்ன பொற்கால ஆட்சி??? விவசாயத்திற்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கல ஆனா செயற்கைகோள் மற்றும் சண்டை விமான பகுதிகள் தயாரிக்க அனுமதியும் மானியமும் தருவதாக உங்க கட்சி முக்கியஸ்தருக்காக கொள்கை அறிவிப்பு தந்திருக்கிறீங்க. சோழியன் குடுமி சும்மா ஆடுமா???


D Natarajan
ஜூலை 27, 2025 21:20

தண்ணீர் சேமிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. எல்லா நீரும் கடலுக்கே. என்று திருந்தும் இந்த திராவிட மாடல் .


Ramesh Sargam
ஜூலை 27, 2025 19:54

போதிய அணைகள் அன்றே, அதாவது திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் கட்டியிருந்தால் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரில் ஒரு பகுதியை அந்த அணைகளில் சேமித்து, வறண்ட காலங்களில் உபயோகப்படுத்தியிருக்கலாம். இன்று நம் தமிழகத்தை சோழன், சேரன், பாண்டியன், பல்லவன் ஆண்டிருந்தால் அது நடந்திருக்கும். திமுக ஆட்சியில் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியுமா? அணை கட்டுவதைவிட, கருணாநிதிக்கு சிலை கட்டுவதில் குறியாக இருக்கிறது திமுக அரசு.


sundarsvpr
ஜூலை 27, 2025 19:50

மழை நீரை வாங்கிக்கொண்டு உறிஞ்சும் நிலைக்கு மண் தரைகள் இல்லை. இதனால் உபயோகம் இல்லாமல் நீர் கடலில் கலக்கிறது நீரால் ஒரு காலத்தில் தரைகள் மூடப்பட்டு உலகும் நீரால் மூழ்கும் அழியும் என்பது நிச்சயம். இது பல லட்ச ஆண்டுகள் கழித்து நடக்கும் என்பது உண்மை என்றால் நாம் அலட்சியமாய் இருக்கிறோம்.


சமீபத்திய செய்தி