உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராணுவ தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரிப்பு; வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி பெருமிதம்!

ராணுவ தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரிப்பு; வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி பெருமிதம்!

ஊட்டி: ''நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும், இப்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது,'' என்று வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு, 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த கல்லுாரியில், 26 நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் காலங்களில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qf7vno7k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முன்னுரிமை

நமது எல்லைகளை பாதுகாக்க அரும்பணியாற்றும் ராணுவத்தினரின் சேவையை எண்ணி, நாடு பெருமை கொள்கிறது. தேசத்துக்கு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணியாற்றுகின்றனர். தேசம் காக்கும் பணிக்கு அவர்களை அனுப்பி வைத்த வீரர்களின் குடும்பத்தாருடைய நாட்டுப்பற்றையும் நான் பாராட்டுகிறேன். இன்று இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது.

முன்னேற்றம்

உலகமே அதை அங்கீகரிக்கிறது. ஆத்மநிர்பர் பாரத் என்ற அடிப்படையில், இந்தியா எதிர்கால சவால்களை சமாளிக்கும் நோக்கில், பல்வேறு தளவாடங்களை சொந்தமாக தயாரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், நமது பாதுகாப்பு தொழில் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்குவதில், டி.ஆர்.டி.ஓ., புதிய உச்சங்களை தொட்டுள்ளது. தற்போது இந்தியா, 100 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் 30 மடங்கு ராணுவ தளவாட ஏற்றுமதி இப்போது அதிகரித்துள்ளது. வேகமாக மாறி வரும் புவி அரசியலில், எந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆராய்ச்சிகள்

புவி அரசியல் சூழல் மாற்றம், பாதுகாப்பு தேவைகளையும் மாற்றி வருகிறது. தேசிய, சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும். இணையத்தில் நடக்கும் போர், பயங்கரவாதம், காலநிலை மாற்றம் குறித்த சவால்களை சமாளிப்பதற்கும் நாம் தயாராக வேண்டும். அந்த வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

மரியாதை!

முன்னதாக, வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவுத்தூணில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவரை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டண்ட் சுனில் குமார் யாதவ் ஆகியோர் வரவேற்றனர். அவர் ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். நீலகிரி பழங்குடியின மக்களை, ராஜ்பவனில் நாளை (நவ.,29) சந்திக்க உள்ளார். 30ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தத்வமசி
நவ 29, 2024 10:43

அமெரிக்கா உறுமும் பொழுதெல்லாம் இந்தியா பல ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கியாவது ஆயுதங்களை வாங்கி குவிக்கும். இப்போது அப்படியே மாற்றம். அதனால் இந்தியாவில் சோர்ஸ் போன்றவர்கள் கலவரங்களை உருவாக்குகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கக்கூடிய நபர்களை குறி வைத்து கலவரத்தை ஏற்படுத்து கிறார்கள். சிறுபான்மை இன மக்களின் ஒட்டு வங்கி சேர்ந்துள்ளது போன்று, இந்து ஓட்டு வங்கி ஒருக்கினைந்து விடக் கூடாது என்று ஜாதிக் கலவரம், விவசாயிகள் போர்வையில் கலவரம், வளர்ச்சிப் பணிகளை தடுக்கும் விதமாக உள்ளூர் மக்களின் கலவரம் என்று அனைத்து விதங்களிலும் அந்நிய சக்திகள் வேலை செய்து வருகின்றனர்.


GMM
நவ 28, 2024 19:37

ஜனாதிபதியை வரவேற்க, சபாநாயகர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அழையாவிட்டாலும் மரியாதையை நிமித்தம் சென்று இருக்க வேண்டும். ராணுவம் பாதுகாக்க போய் தான் ஊருக்குள் உல்லாசமாக வாழ்கிறீர்கள். இல்லாவிட்டால் தொழில் தெரியாத உங்களை அந்நியன் படை எடுத்து, அரை சட்டையுடன் திறந்த வெளியில் உட்கார வைத்து வேலை வாங்கி விடுவான். தேச பாதுகாப்பு இல்லை என்றால், முதல் ஆபத்து பெண்களுக்கு தான் . வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.


john joe
நவ 28, 2024 17:59

தயவு செய்து உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டாம்.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு நம் நாடு .இதனால் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து சுயலாபம் தேடவேண்டாம் . ....அப்போதுதான் உண்மையான பொருளாதாரம் மேம்படும் .


raja
நவ 28, 2024 15:41

இதுவும் நமது பிரதமர் மோடியின் சாதனை...


அப்பாவி
நவ 28, 2024 15:29

இது போருக்கான நேரமில்லை. எல்லோரும் தளவாடம் வாங்கி ரெடியாயிட்டு வராங்க. உண்மைதான்.


hari
நவ 28, 2024 20:45

நீயும் டாஸ்மாக் இல் பாட்டிலை திருப்பி கொடுக்கலாம் கோவாலா


MARI KUMAR
நவ 28, 2024 15:18

ராணுவ தளவாடங்கள் உற்பத்தி காங்கிரஸ் ஆட்சியை விட சிறப்பாக உள்ளது இது எல்லாரும் அறிந்த விஷயம். பயங்கரவாத சக்தி தலை தூக்கல் குறைந்துள்ளது