உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மினி பஸ் வழித்தட மோசடி; கோவை கலெக்டர் தடாலடி

மினி பஸ் வழித்தட மோசடி; கோவை கலெக்டர் தடாலடி

கோவை : கோவையில் மினி பஸ் இயக்க, 67 வழித்தடங்களுக்கு 323 விண்ணப்பங்கள் வந்தன. இதன் மீது ஆய்வு நடத்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலெக்டர் பவன்குமாருக்கு பரிசீலனை செய்தனர்.ஒவ்வொரு விண்ணப்பங்களாக ஆய்வு செய்த கலெக்டர், விண்ணப்பதாரர் பெயரும், விண்ணப்பத்தில் உள்ள தகவல்களும் வெவ்வேறாக இருந்ததை கண்டறிந்தார்.சில விண்ணப்பங்களில் இருந்த தொடர்பு எண்ணுக்கு போன் செய்து பேசினார். இதில், மினி பஸ்சுக்கும், தொடர்பு எண்ணுக்கும் சம்பந்தம் இல்லாதது தெரிந்தது.விண்ணப்பத்துடன் நேரடி உத்தரவு பெற வந்தவரிடம் விசாரித்த போது, குறிப்பிட்ட வழித்தடத்தை எப்படியேனும் கைப்பற்ற, ஒரே நபர் வெவ்வேறு பெயர்களில் விண்ணப்பித்தது தெரியவந்து, அது ரத்து செய்யப்பட்டது.இதேபோல், பல்வேறு வழித்தடங்களில், குளறுபடி நடந்திருப்பதை அதிகாரிகள் முன்னிலையில், கலெக்டர் போன் செய்து அம்பலப்படுத்தினார்.முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து விண்ணப்பங்களையும் ரத்து செய்து, போக்குவரத்து துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை