உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50: நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தல்

 ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50: நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தல்

சென்னை: 'தமிழகத்தில் புதிதாக நிர்ணயிக்கப்படும் ஆட்டோ கட்டணத்தில், குறைந்தபட்ச கட்டணமாக, 50 ரூபாய் போதுமானது' என, அரசுக்கு, நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன. முத்தரப்பு பேச்சு தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, 13 ஆண்டுகளாகி விட்டது. புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, சென்னையில் முத்தரப்பு பேச்சு நடந்தது. பல்வேறு நுகர்வோர் அமைப்புகளில் இருந்து, 90 பேர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில், ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 60 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதல் உயர்வு அளிக்கக்கூடாது என்று தெரிவிக்கப் பட்டது. இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் பால் பர்ணபாஸ் கூறியதாவது: சென்னை போன்ற பெரிய நகரங்களில், குறுகிய துார பயணத்துக்கு, ஆட்டோவை லட்சக் கணக்கானோர் பயன் படுத்தி வருகின்றனர். புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செ ய்யும் போது, குறைந்த பட்ச கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். டிஜிட்டல் மீட்டர் ஒவ்வொரு கி.மீ.,க்கும், 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும், அரசு அங்கீகாரம் பெற்ற, டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் கட்டாயம் பொ ருத்தப்பட வேண்டும். தனியாக செயலி தொடங்கி, அதில், ஆட்டோ முன்பதிவு, கட்டண கணக்கீடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, மின்னணு ரசீது, புகார் பதிவு, ஓட்டுநர் விபரங்கள் மற்றும் நேரடி வாகன இருப்பிடம் போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Srinivasan Ramabhadran
ஜூலை 11, 2026 06:17

இப்பொழுது கூட, ஓலா/ ஊபர் / ரபிடோ போன்ற செயலிகள் மூலம் ஆட்டோ அல்லது டாக்ஸி புக் செய்தாலும், பல வாகன ஓட்டிகள் அந்த aapல் காண்பிக்கும் கட்டணத்திற்கு மேல் தரும்படி கேட்கின்றனர். அப்படி தர ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சவாரியை கேன்சல் செய்து விடுகின்றனர்.


sankaranarayanan
ஜூலை 11, 2026 04:55

தமிழ் நாட்டில் அதிலும் முக்கியமாக சென்னை மற்றும் பெரிய நகரங்களில் உடனே ஆட்டோவுக்கு ஓடும் மீட்டரை பொருத்தி அதில் வரும் சரியான தொகையை மட்டும் அவர்கள் மக்களிடம் பெறவேண்டும் வெறும் பொம்மையாக மீட்டரை பொருத்தி வைக்கக்கூடாது திராவிட மாடல் அரசிலும் அதிமுக அரசிலும் இதை கண்டுகொள்ளவே இல்லை எத்தனையோ முறைமக்கள் மக்கள் கதறியும் அழுதும் ஒன்றும் பயனில்லை இப்போதாவது நமது முதல்வர் விஜய் அரசியலில் இதை கண்டிப்பாக செய்து மக்களுக்கும் ம் ஆட்டோக்காரர்களுக்கும் உதவ வேண்டும் மீட்டரால் நிர்ணயித்ததைவிட எந்த ஆட்டோகாரர்களும் கூட கட்டணம் கேட்கக்கூடாது அப்படியே மக்கள் கொடுத்தாலும் வாங்கக்கூடாது அதுதான் பெருந்தன்மை