உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பச்சை பயறு, உளுந்துக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்

பச்சை பயறு, உளுந்துக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்

சென்னை:பச்சை பயறு மற்றும் உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை, தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. சென்னை, நீலகிரி தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு முழுதும் உளுந்து பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும், 22,000 டன் வரை உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ஈரோடு, திருவண்ணாமலை, கடலுார், மதுரை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பச்சை பயறு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், 10,000 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. பச்சை பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை பயறுக்கு, 87.60 ரூபாயும், 100 கிலோ கொண்ட ஒரு குவின்டாலுக்கு, 8,768 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, ஒரு கிலோ உளுந்துக்கு 78 ரூபாயும், ஒரு குவின்டாலுக்கு 7,800 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை