உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் பேசி தமிழில் திட்டுகிறார்! ஆனா இப்படி பண்ணிட்டாரே சீமான்! அமைச்சர் வேதனை

தமிழில் பேசி தமிழில் திட்டுகிறார்! ஆனா இப்படி பண்ணிட்டாரே சீமான்! அமைச்சர் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: தமிழில் தான் பேசுகிறார், அதே தமிழில் தான் எங்களை திட்டுகிறார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று சீமான் பேசியது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். ஈரோட்டில் கண்காட்சி ஒன்றை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும். தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று சொல்ல நாங்கள் தயார். திராவிடம் என்றால் என்ன என்று சொல்ல யாராவது தயாராக உள்ளார்களா? என்று பேசினார்.தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று சீமான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாத, பிரதிவாதங்களை முன் வைத்து வருகின்றனர். இந் நிலையில் திருச்சியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மகேஸிடம் சீமானின் பேட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு; அவர் எதை வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்று தெரிய வில்லை. நம்முடைய அரசியல் என்று வரும்போது, குறிப்பாக தமிழ்நாடு அரசு என்று வரும்போது அரசியலே கல்வியில் தான் ஆரம்பிக்கிறது.அனைவருக்கும் கல்வி என்று நீதிக்கட்சி ஆரம்பித்தது தான் எல்லாமே. அப்படி வரும்போது, தாய்மொழியை தூக்கிவிடுவோம், எடுத்து விடுவோம் என்று சொல்வது உள்ளபடியே வேதனைக்கு உரியதாக தான் இருக்கிறது. அவர் பேசுவதே தமிழில் தான் பேசுகிறார். எங்களை திட்டுவதும் தமிழில்தான். பாராட்டுவதும் தமிழில்தான் பாராட்டுகிறார். அப்படி பேசுகிறவர் இப்படி பேசி இருப்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்றாகத்தான் பார்க்கின்றோம்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Madhavan
அக் 22, 2024 18:12

உங்களுடைய இஷ்டத்துக்கு ஒரு படைப்பாளரின் கவிதையை மாற்றுவீர்களா? திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பின் அடையாளம். அவ்வளவே."திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்றவர்கள் பின்னர் அதை மூட்டை கட்டி வைத்து விட்டு சட்டத்திற்கு பயந்து தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு என அறிவித்தார்கள் அதாவது அதுவரை பிரிவினை பேசியதை ஒப்புக்கொண்டனர். ஆனால் திராவிட எனும் வார்த்தையை தங்களது கட்சிப் பெயரிலிருந்து நீக்காமல் வைத்துக் கொண்டும் அனைத்தும் திராவிட மாடல் என புதிய லேபில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை பிரிவினை என சந்தேகிப்பதில் நியாயம் உள்ளது.


Thiru Thiru
அக் 21, 2024 12:26

செபஸ்டின் சீமான் திராவிட மாடலை நார் நாராக கிழித்து தொங்க விடுகிறார் ஆனால் திராவிட மாடலோ எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காக்கிறது என்ன நடக்கிறது அண்ணாதுரை தொடங்கிய கட்சிக்கு நேற்று முளைத்த காளான் சவால் விடுகிறது


chinnamani balan
அக் 21, 2024 11:23

சுந்தரனார் இயற்றிய தமிழ் வாழ்த்து, 1971 ல் தமிழக அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட போது, சுந்தரனாரின் வாழ்த்தில் இருந்த 5 வரிகள் நீக்கப்பட்ட உண்மை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 5 வரிகளை நீக்கிய அதே நேரத்தில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் எனும் வரியில் உள்ள திராவிட நல்திருநாடு என்பதும் நீக்கப்பட்டு, தமிழர் நல்திருநாடு என மாற்றப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் 1969 ல் சென்னைக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு விட்டது. சுந்தரனார் திராவிட நல்திருநாடு என்று கூறிய பகுதியில் இருந்த தமிழகம்,ஆந்திரம், கர்நாடகம், கேரளம் அனைத்தும் தனித்தனி மாநிலங்களாகவும் பிரிந்து விட்டன. எனவே அன்றைய திமுக அரசு சுந்தரனாரின் வாழ்த்துப் பாடலில் உள்ள சில வரிகளை புறக்கணித்தது போன்று திராவிட நல்திருநாடு என்ற வரியையும் மாற்றி, தமிழர் நல்திருநாடு என அமைத்து இருக்கலாம்.


Palanisamy T
அக் 21, 2024 13:07

உங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க்குமென்று நம்புவோம். திராவிட மென்றால் ஆந்திரம் கர்நாடகம் கேரளம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த மாநிலங்களெல்லாம் இடைக் காலத்தில் உருவாகிய மாநிலங்கள். மொத்தத்தில் அன்று நம்மைப் விட்டு பிரிந்துப் போன தமிழர்கள். மொழிக் கலப்பால் சிதைவால் ஏற்பட்ட பின் விளைவுகள் இவை. அன்று காலம் சென்ற குன்றக்குடி அடிகளார் காவேரி நீர்ப் பிரச்சனைப் பற்றி பேசும் போது சொன்ன வொரு உண்மை " -அன்று நம்மிடையே மொழிப் பற்றுமட்டும் இருந்திருந்தால் இன்று தமிழர்கள் பிரிந்திருப்பார்களா,? இன்று காவேரி விவகாரம் தோன்றி யிருக்குமா?" என்றார். அவர் ஏன் அப்படிச் சொன்னாரென்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இனிமேலாவது நம் மொழிப் பற்றின் அவசியத்தை நாம் உணர்தல் வேண்டும். நாளைய தமிழகத்தை காப்பாற்றுங்கள்


Palanisamy T
அக் 21, 2024 08:57

ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாயின் பாடலை நீக்குவேன் என்று சொல்லும் இவரைப் நம்பி எந்த தொகுதியிலும் இனிமேல் வாக்களிக்காதீர்கள். இவர் தமிழில் பேசலாம், திட்டலாம் ஆனால் தமிழ் தாயை அவமதிக்கும் எல்லைக்கே சென்றுவிட்டார் தமிழை ஒழுங்காக படித்திருந்தால் இப்படி அநாகரிகமாக பேசியிருக்கமாட்டார்.


J.V. Iyer
அக் 21, 2024 07:39

சுந்தரனார் இயற்றிய முழு தமிழ்த்தாய் வாழ்த்தையும் சொல்லவேண்டும். இல்லை என்றால் அதை தூக்குவதுதான் தமிழுக்கு செய்யும் தொண்டு. இந்த விஷயத்தில் மட்டும் சீமானை ஆதரியுங்கள்.


Palanisamy T
அக் 21, 2024 12:30

அய்யா, தூக்கவேண்டுமென்றால் தமிழில் நிறைய நூட்களை தூக்கவேண்டும். திருமுறை பாடல்கள் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் நம்மிடம் முழுமையாக யில்லை. 4 தமிழ்வேதங்களான அறம் பொருள் இன்பம் வீடு இவைகளும் நம்மிடம் முற்றாகயில்லை. காலத்தால் அழிந்துப் போன நூல்கள் பல. இந்த வேதங்களின் சாரங்கள் கொண்ட நூல் இன்று நம்மிடையேவுள்ள திருக்குறள். குறளை வேதநூலென்றுச் சொன்னவர் வாரியார் ஸ்வாமிகள் அவர்கள். இப்போது சீமான் அவர்களின் பிரச்சனை முழு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில்லை. பாடலையே நீக்கிவிடுவோமென்பதுதான் இது தேவையா? நீங்கள் தமிழ் டு inதொண்டைப் பற்றிப் பேசியதுதான் நெஞ்சமே வலிக்கிறது.


Mani . V
அக் 21, 2024 05:51

நீ மந்திரி வேலையை செய்யாமல், உதயநிதி இளைஞர் மன்ற வேலைகளை மட்டும்தான் செய்கிறீர். நாங்கள் வருத்தப்பட்டமா? இல்லையே.


Raja
அக் 20, 2024 23:52

அமைச்சர் வாய் கிழிய பேசுவதற்கு குறைவில்லை, தமிழ் இங்கு குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கின்றது , ஒரு ஆறாவது படிக்கும் மாணவன், வேண்டாம் ஒரு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தமிழை பிழையில்லாமல் எழுதுவானா அரசு பள்ளியில்? ஒரு இரண்டு நிமிடம் ஆங்கிலம் கலக்காமல் பேசும் திறன் பெற்றிருக்கிறார்களா? இந்தி கூட அனுமதிக்காமல் பொத்தி பொத்தி வைத்து தமிழ் வளர்த்த திராவிட நாட்டில்? எதற்கு இந்த வெறும் வாயில் முழம் போட்டு, வடையும் சுடுகிறீர்கள் காலம் காலமாக திமுகவில்?


பேசும் தமிழன்
அக் 20, 2024 22:10

தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்பதை தமிழர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள் .... அதனால் தான் திராவிடம் என்று சொல்லி.... தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு இருக்கிறார்கள்.


Madhavan
அக் 21, 2024 09:47

தனி திராவிட நாடு கோரிக்கையை ஊர் அறிய உலகறிய மூட்டை கட்டி வைத்து விட்டு தேசிய ஒருமைப்பாட்டுக்குக்கு குரல் கொடுப்போம் என்றார்கள் தங்கள் கட்சியில் இருக்கும் திராவிட எனும் சொல்லை இன்று வரை நீக்காதமைக்கு அரசியல்தான் காரணம் இந்தப் பெயரை வைத்துக் கொண்டு மக்களை அவ்வப்போது உசுப்பி விட்டுக் கொண்டே இருந்தால் ஆட்சியில் நீடிக்கலாம் அதே போல ஹிந்தி எதிர்ப்பு, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றெல்லாம் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் நம் பக்கமே இருப்பார்கள் என்று திட்டம் போட்டுதான் செயல் படுத்துகிறார்கள். மக்கள் ஒருவேளை மறந்து விட்டால் என்ன செய்வது? எனவேதான் திராவிட மாடலைக் கண்டுபிடித்து அவ்வப்போது பேசுகிறார்கள்? உண்மையிலேயே திராவிட மக்கள் யார்? திராவிட நாடு எது? யார் இந்த திராவிட நாட்டை ஆண்டார்கள்? அவர்களது மன்னர் பரம்பரை யாது? எதுவும் பண்டை இலக்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ இது பற்றி இல்லை என்பதுதான் உண்மை.பாமர மக்களின் மூளைச் சலவைக்கு சோப்பு பவுடராகத்தான் திராவிடம், தமிழ், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை உபயோகிக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.


Madhavan
அக் 20, 2024 21:43

உண்மையிலேயே தமிழின் மீதிருந்த பற்றின் காரணமாகனில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது திடீரென புகுத்தப்பட்டதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? அதுவும் அரசியல்தான்.... திரு. அண்ணாதுரை அவர்களால் தனி நாடு கோரிக்கை கை கழுவப்பட்டதை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் மனோன்மணி சுந்தரனாரின் நீராருங்கடலுடுத்த.. பாடலைத் தெரிவு செய்யக் காரணம்? அரசியல்தான்... தங்கள் கட்சி அரசியலில் நீடிக்க இந்தப் பாடலைத் தெரிவு செய்தார்கள் என்பதை நம்ப வேண்டியுள்ளது...மேலும் இந்தப் பாடல் தமிழ்த்தாயையும் வாழ்த்துகிறது திராவிட நல் திருநாடும் எனும் வரிகளும் வரிகின்றன. பாரதி எவ்வளவோ கவிதைகள், தேச பக்திப் பாடல்கள் எழுதியுள்ளதைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.ஒரே ஒரு நாடகம் மனோன்மணீயம் அதுவும் எங்கும் நாடகமாக நடிக்கப்பட்டதாகவோ, திரைப்படமாக்கப் பட்ட்தாகவோ தெரியவில்லை இந்த நாடகத்தில் முதலில் காப்புச் செய்யுள் போல வரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுவதுமாக ஏற்றுக் கொண்டால் பிரச்னை வரும் என்பதால் சுருக்கினார்கள் இப்போதும் தீர்ந்தபாடில்லை. திராவிட மாடல் என்றெல்லாம் பேசுகிறார்கள் எனில் அரசியல் அல்லாது வேறு என்ன?


Narayanan Sa
அக் 20, 2024 21:32

தமிழ் தாய் வாழ்த்துத்தை நீக்குவேன் என்று தான் சீமான் கூறுகிறார். ஏன் என்றால் அரசியல் வாதிகள் மற்றும் திமுக அதிமுக கட்சியில் இருப்பவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது அதனால் அப்படி சொல்கிறார்.


சமீபத்திய செய்தி