உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொத்தடிமைகள் இல்லாத தமிழகம் அமைச்சர் உறுதி

கொத்தடிமைகள் இல்லாத தமிழகம் அமைச்சர் உறுதி

சென்னை:கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளை கவுரவிக்கும் விழா, நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், வேலுார், தர்மபுரி உட்பட 20 மாவட்டங்களில், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட, 700க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமியர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீட்கப்பட்ட பெண்களில், கல்வி, சுயதொழிலில் சிறந்து விளக்கும் 11 பேருக்கு, 'ஆளுமை' விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அவர் பேசுகையில், ''வரும் 2030க்குள், இச்சட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தி, கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை மாற்றுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஆக 15, 2025 07:38

தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் 35000 கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர்.அவர்களுக்கு ஒரு ஆண்டு வரை குறைந்தபட்ச ஊதிய சட்டப் படி நிர்ணயம் செய்யும் சம்பளத்தில் பாதியும் ஓராண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்களின் சம்பளத்தில் பாதியும் வழங்குகின்றனர். இந்த வகையில் 700 கோடி ரூபாய் 1990 முதல் அரசு சுரண்டியுள்ளது அவர்களிடமிருந்து. அவர்களுக்கு ரேஷன் பொருட்களை எடை போடாமல் இறக்கி எடை போட்டு இறங்கியதாக போலியான ஆவணங்கள் தயாரித்து 10 சதவிகிதம் வரை கொள்ளை அடிப்பதால் எடை குறைத்து வழங்கி ஈடு கட்டி வந்தனர்.இப்போது வெளி மார்க்கெட் விலையில் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


சமீபத்திய செய்தி