உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரை கவர்னர் நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு: சிறப்பு விவாதம்

அமைச்சரை கவர்னர் நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

அமைச்சரவை பரிந்துரையின்படிதான் கவர்னர் செயல்பட வேண்டும். அமைச்சரை பதவியிலிருந்து கவர்னர் நீக்க முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், '' செந்தில் பாலாஜியின் பதவி! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் சொல்லப்படாத சேதி என்ன?'' என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=Hzud6xcdZj0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Karthikeyan K Y
ஜன 07, 2024 20:18

மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட எம் எல் ஏ அமைச்சராகி மக்கள் வரி பணத்தில் அனுபவித்து ஊழல் செய்து தன்னை அவரும் ஒப்பு கொண்டு, கைதும் செய்யப்பட்டு நீதிமன்றமும், ஆளுநரும், மக்களும் நீக்க முடியாது தார்மீகமாக அவரும் விலக மாட்டார் அவருடைய முதல் அமைச்சரும் திராவிட மாடல் கொள்கையின் அடிப்படையில் நீக்க மாட்டார். ஆகா அமைச்சராக ஒருவர் நியமிக்க பட்டார் என்றால் அவரை மக்கள் ஒன்றும் செய்ய முடியாது நீதிமன்றமும் ஒன்றும் செய்ய முடியாது ஆளுநரும் ஒன்றும் செய்ய முடியாது அப்படி இருக்கும் பொது அவருக்கு எப்படி தண்டனை கிடைக்கும் - மக்கள் சிந்திக்க வேண்டும்


GMM
ஜன 07, 2024 15:50

அமைச்சர் பதவிக்கு கல்வி, மருத்துவ, நன்னடத்தை, வயது சான்று தேவையில்லை. வாக்குரிமை இருந்தால் போதும். விரும்பும் வாக்காளர்கள் மூலம் மட்டும் தேர்வு. அமைச்சரவை பரிந்துரைப்படி கவர்னர் நடக்க வேண்டும் என்றால், கவர்னர் அதிகாரம், வேலை என்ன? செந்தில் பாலாஜி அமைச்சர் சிறை கைதி ஆன பின் கவர்னர் நீக்க முடியாது


தத்வமசி
ஜன 07, 2024 15:48

மக்களின் வரிப்பணம் எப்படி போனால் என்ன ? எவன் மந்திரி ஆனால் என்ன ? இது தான் இந்திய சட்டமா யுவர் ஆனர் ? அநியாயம் நடக்கும் போது கண் பொத்தி வாய் பொத்தி நிற்பதுவும் குற்றமில்லையா யுவர் ஆனர் ? நீங்கள் தானே குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று உள்ளே வைத்துள்ளீர்கள். இப்போது இதையும் கூறினால் யாரைத் தான் சாதாரண குடிமகன் தங்களின் குறையை கூறுவது ?


Kasimani Baskaran
ஜன 07, 2024 14:11

குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் ஒருவரால் எப்படி மந்திரியாக நீடிக்க முடியும்? சிறையிலிருக்கும் ஒருவரால் எப்படி பொதுமக்களின் வரிப்பணத்தில் ஓசியில் சம்பளம் வாங்க முடியும்.


சிவசு
ஜன 07, 2024 13:14

No work no pay சட்டம் அடித்தட்டு கூலியாளிக்கும் தொழிலாளிக்கும் ஊழியர்களுக்கும் தான்!


Godyes
ஜன 07, 2024 12:32

தவறு செய்யும் தனிமனிதன் மீது சட்டம் பாய்கிறது.அவன் இன்னார் தான் ஆட்சி பிடிக்க வேண்டும் என்று வாக்களிப்பதை அதே சட்டம் ஏற்கிறது.


Godyes
ஜன 07, 2024 12:11

வாக்காளர்கள் வாக்களிப்பில் ஆட்சி பிடித்து விட்டால் போதுமா.


T.S.SUDARSAN
ஜன 07, 2024 11:16

உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுக்கும் என்று நினைதேன்.அனால் என் நினைப்பை தவறு என்று கூறியது. நான் கட்டும் வரிகளில் தான் இந்த செந்தில் பலாஜி சம்பளம் வாங்குகிறான். இதையே அரசு ஊழியர்கள் செய்தல் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். என்னே தீர்ப்பு .ம்.


Raj
ஜன 07, 2024 10:35

மந்திரி ஊழல் செய்தது நிரூபணம் ஆகிவிட்டது, அவர் சிறையில் அடைக்கபட்டார், அதன் பிறகு எதற்கு மந்திரி பதவி. என்ன சட்டமோ... கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றால் அந்த போஸ்ட் வேஸ்ட் தானே. இனி குற்றங்கள் அதிகரிக்க கூடும்.


Ramesh Sargam
ஜன 07, 2024 10:15

தீர்ப்பு சரியில்லையே... ஆக குற்றம் செய்திருந்தாலும், அமைச்சர் பதவியில் நீடிக்கலாம். சம்பளம் வாங்கலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி