உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலையின் நல்ல எண்ணத்திற்கு நன்றி: அமைச்சர் துரைமுருகன்

அண்ணாமலையின் நல்ல எண்ணத்திற்கு நன்றி: அமைச்சர் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்; தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் நல்ல எண்ணத்திற்கு நன்றி என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார். ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது கருத்துக்கு தாம் உடன்படுவதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். அண்மையில் இது குறித்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஈ.வெ.ரா., பற்றி அவதூறு பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன் என்று விமர்சித்து இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lwbcelgj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துரைமுருகனின் இந்த கருத்துக்கு அண்ணாமலையும் பதில் அளித்துவிட்டார். துரைமுருகனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந் நிலையில் வேலூரில் நிருபர்களை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது அண்ணாமலை கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு துரைமுருகன் கூறியதாவது; அண்ணாமலையின் நல்ல எண்ணத்துக்கு நன்றி. அவர் பெரும்பாலும் என்னை பற்றி பேச மாட்டார். அதனால் அவரை பற்றி பேச வேண்டாம். தமிழக அரசுடன் கவர்னர் ஆர்.என். ரவி முச்சந்தியில் சண்டை போடுவது போன்று போடுகிறார். கவர்னர் பதவிக்கான மாண்பு, மரியாதையை மறந்துவிட்டு சண்டை போடுகிறார். அரசியல்வாதி போல் செயல்படுவதை கவர்னர் நிறுத்த வேண்டும்.இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

SP
ஜன 14, 2025 21:48

ஏன் பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? பெரியாரைப் போல திமுகவை விமர்சனம் செய்தவர்கள் யாரும் இல்லை. அதேபோல் பெரியாரை திமுகவும் மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்திருக்கிறது.


VIDYASAGAR SHENOY
ஜன 14, 2025 21:37

உனக்கு ஒன்னும் சொல்லமுடியாது ஏன் என்றல் ED பயம் . எதிர்த்து அறிக்கை விட்டால் பின்னர் காரில் படுத்து urine பாஸ் பண்னண வேண்டியது வரும் அண்ணாமலை சொன்ன பக்கம் 21 என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்


Karthik
ஜன 14, 2025 21:30

முழுசா முக்காடு போட்டுக்கோ மூக்கு மறையும் வரை. ஏனெனில் உடைஞ்சது யாருக்கும் தெரியக்கூடாது அல்லவா ?? வரலாறு முக்கியம் அமைச்சரே ..


sankaranarayanan
ஜன 14, 2025 21:10

கோபால புரத்து விசுவாசி கட்சில்யிதான் இருக்கிராரா? யாமறியேன் பராபரமே என்று கூவிக்கொண்டு வீட்டிலே பண்ணை வீட்டிலே கல்லூரியிலே பல பல கோடி ரூபாய் நோட்டுக்கட்டுகள் சிபிஐயிடம் கிடைத்தனவாமே பாவம் ஒன்றுமே அறியாத விஷம கிழம் வாயையே திறக்கமாட்டார் திறந்தாள் கிருஷ்ண லீவிலைபோன்று ஏஷு லோகத்திலும் இருக்கு பண வரவு உண்டு கட்சின் துரை இவர்


viji
ஜன 14, 2025 20:26

பெரியாரை பத்தி பேசினா பிறப்பை சந்தேகப்படுவியா அந்த ஆள் பேசியதற்கு ஆதாரம் இருக்கு


Ramesh Sargam
ஜன 14, 2025 19:54

ஈ.வெ.ரா.வை தலையில் தூக்கி கொண்டாடுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 19:43

நீயென்ன .... உன் மேலிடத்தையே தில்லியில் போயி பார்த்து சரிகட்டிட்டேன் எண்கிறாரோ ??


anonymous
ஜன 14, 2025 19:11

காடு வா வா என்கிறது வீடு போ போ.................


sridhar
ஜன 14, 2025 19:08

நிரந்தர ஓய்வு எடுத்துக்கோ , கூட அந்த உளறுவாயனையும் கூட்டிப்போ .


C.SRIRAM
ஜன 14, 2025 18:08

இந்த கூமுட்டை அமைச்சரின் பிறப்பையும் சந்தேகப்படவேண்டியது தான் . சீமான் சொன்ன கருத்துக்களுக்கு ஆதாரம் உண்டு . வரலாறு முக்கியம் அமைச்சரே