உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்

இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்

சென்னை; தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, அமைச்சர் மகேஸ் பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது; உடைந்ததை ஒட்ட வைக்க வேண்டாம்,தேசிய கல்விக்கொள்கையின் மூலம் நன்றாக செயல்படும் தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம்.தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மொழி பிரச்னையை விமர்சிப்பது தவறாக வழி நடத்துவது என்பது மட்டுமல்ல. உண்மையான பிரச்னை என்ன என்பதையே தள்ளி வைப்பதாகிறது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் சோதனை முயற்சியை கடந்து பல ஆண்டுகளாக வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்விமுறை சிறப்பாக உள்ளது, தேசிய கல்விக் கொள்கை அதை சீர்குலைக்கிறது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பாடத்திட்டம் சிறந்த பலன்களை தருகிறது. தமிழகத்தின் கல்விமுறையானது சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. மனப்பாடம் செய்வதற்கு பதிலாக கருத்து அடிப்படையிலான கற்றலில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். 1635 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர். இதன்மூலம் தமிழக மக்கள் என்ன விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது. சிலர் கூறுவது போன்று, 3வது மொழியை கற்க வேண்டும் என்ற உண்மையான தேவை இருந்திருந்தால் நம் மக்கள் ஏன் மாநில வாரிய பள்ளிகளை தொடர்ந்து தேர்வு செய்கின்றனர். மக்களின் விருப்பங்களை புரிந்துகொண்டு நடப்போம். இரு மொழிக் கொள்கையையே தமிழகம் விரும்புகிறது.ஆங்கிலம் ஏற்கனவே தமிழகத்தின் இருமொழி அமைப்பின் ஒரு பகுதி, மாணவர்கள் தங்கள் கலாசார அடையாளத்தைப் பேணுகையில் உலகளாவிய வாய்ப்புகள் இருப்பதை இங்குள்ள கல்விமுறை உறுதி செய்கிறது.தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல ,அது நமது வேர்கள், வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு இணைப்பு. எனவே, தமிழகத்தில் எவ்வித மொழியையும் வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டாம். தமிழகத்தில் ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது பெருமைக்கு தமிழும், உலக வழிகாட்டியாக ஆங்கிலமும் நமது முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்குமான பாதை.எனவே, நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, ​​தமிழகத்துக்கு கட்டாயமாக மூன்றாம் மொழி தேவையில்லை.தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் சிறந்த கல்வி முறை மூலம் சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள் உருவாகி வருகின்றனர். பின்னர் ஏன் இந்த மாற்றத்தை கட்டாயப்படுத்த வேண்டும்? தேசிய மொழிக்கொள்கையை விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் மாற்ற வேண்டும்? இது மொழியை மட்டுமல்ல, கல்விமுறையை பாதுகாப்பது பற்றியது. தமிழகம் தனது மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் சமரசம் செய்யாது. தயவுசெய்து சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை சீர்குலைக்காதீர்கள்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

R.P.Anand
மார் 13, 2025 10:06

இரண்டு பேரும் மாற்றி மாற்றி பேசி பிரயஜனம் இல்லை. மாவட்டங்களில் உள்ள மத்திய பள்ளிகளின் சீட்டை அதிக படுத்துங்கள்


Jay
மார் 12, 2025 16:18

அரசு பள்ளி மாணவர்களை இரு மொழிக்கு மேல் படிக்க விடமாட்டோம். அப்படி படிப்பதாக இருந்தால் தனியார் படியில் சென்று படியுங்கள் என்பதுதான் இவர்களுடைய பேச்சு. தொடர்ந்து பொய்களை ஆள் மாற்றி ஆள் பேசிக் கொண்டிருக்கின்றனர் திமுகவில். தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கு மட்டும் மூன்று மொழி கல்வி, அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இரு மொழி கல்வியா?


Sridhar
மார் 12, 2025 15:45

அப்போ மாணவர்கள் எல்லாம் தனியார் பள்ளிகள்ல இந்தி படிக்கணும்ங்கற பயத்துலதான் அதை தவிர்த்திட்டு அரசு பள்ளிகள்ல சேர்ந்திருக்காங்கனு சொல்றாரு நம்ம பொய்யாமணி. இவருக்கு ஒரு வியாபார ஐடியா கொடுக்கலாம். நீங்க நடத்துற தனியார் பள்ளிகள்ல இந்தி ய தூக்கிடுங்க. அப்போ ஒட்டுமொத்தமா அந்த ஒரு கோடி பெரும் உங்க பள்ளிக்கூடங்கள்ல சேந்துடுவாங்க. இப்போ 15 லச்சம்ல இருக்குற வியாபாரம் ஒரு கோடிக்கு மேல சும்மா பிச்சிக்கும். இப்பவே 30,000 கோடினு சொல்ராங்க, இந்தி ய தூக்கிட்டிங்கன்னா 300,000 கோடிக்கு மேல போயிருமே பிராடு பய.


Ambedkumar
மார் 12, 2025 15:08

அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறனில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பது இந்த அமைச்சருக்கு தெரியாமல் இருப்பது விந்தை.


RAMKUMAR
மார் 12, 2025 13:03

நீங்கள் யார் வேண்டாம் என்று சொல்ல ..


RAMKUMAR
மார் 12, 2025 13:03

இல்ல சார் ஹிந்தி பிரெஞ்சு வேணும் சார் . நீங்கள் யார் வேண்டாம் என்று சொல்ல ..


HoneyBee
மார் 12, 2025 12:36

அட விளக்கெண்ணெய்.. நீ ஏன் போய் அவரை சந்தித்த.. முதலில் அதை சொல்லு


ponssasi
மார் 12, 2025 12:31

உங்கள் குடும்பத்துக்கு மட்டும் மும்மொழி வேண்டும், ஒரு நல்ல தகப்பனாக உங்கள் மகனுக்கு மும்மொழி கற்று தருகிறீர்கள் வாழ்த்துக்கள் மகேஷ். அதைப்போல உங்கள் அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவராகவும் இருக்கவேண்டும் அல்லவா? வீட்டுக்கு ஒரு நிலை நாட்டுக்கு ஒரு நிலையா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? உங்கள் மகனைப்போல அல்லவா உங்கள் வீடு வேலை செய்யும் தொழிலாளிகள் மகன்களும். உங்கள் மகனைவிட அவர்கள் வல்லவர்களாக இருக்கலாம் அதற்க்கு ஒருவாய்ப்பை அமைச்சராக நீங்கள் அவர்களுக்கு வழங்கவேண்டும் அல்லவா?


Rajarajan
மார் 12, 2025 12:27

மாநில கல்வியை ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் ?? ஏனெனில், அவங்க ஏழைகள், மேலும் அரசு தான் அவற்றை தன்வசம் வைத்துள்ளது. அப்போ இதுல சேராம, எதுல சேருங்க?? அது இருக்கட்டும். இவ்ளோ பேசறீங்களே, உங்க வாரிசுகள் மும்மொழி படிக்கறாங்களே. உங்க மேல ஏன் அவதூறு நடவடிக்கை எடுக்க கூடாது ?? அதாவது, அரசு பள்ளிகளை நீங்களே மதிக்கலன்னு வழக்கு போடலாமே.


Rajarajan
மார் 12, 2025 12:22

டாஸ்மாக் கூடத்தான் வேண்டாம்னு சொல்றோம். கேக்கறீங்களா ?? உங்க விருப்பத்தை, எங்ககிட்ட திணிக்காதீங்க. உங்க மகனுக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ?? முதல்ல திராவிட வாரிசுங்க நடத்தற பள்ளிகள் மற்றும் படிக்கற பள்ளிகளை, இரு மொழி கொள்கைல சேருங்க. அப்பறம் நாங்க சம்மதிக்கறத பத்தி யோசிப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை