உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் புகார் அளிக்கின்றனர்; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் புகார் அளிக்கின்றனர்; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கின்றனர் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ரகுபதி அளித்த பேட்டி: பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இப்பொழுது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன் மாணவிகள் அச்சம் உணர்வோடு இருந்தார்கள். யாரிடம் சொல்வது, சொன்னால் ஆசிரியர் தனது மதிப்பெண்களை குறைத்து விடுவாரோ, பழி வாங்கி விடுவாரோ என்ற பயம் எல்லாம் மாணவிகளுக்கு இருந்தது. இப்போது மாணவிகளுக்கு தைரியம் வந்து இருக்கிறது. அச்சம் மாணவிகள் மத்தியில் நீங்கியுள்ளது. இந்த ஆட்சியில் உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.குற்றங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து இருக்கிறது. பெண்களுக்கு தி.மு.க., அரசு பாதுகாப்பை தருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. இ.பி.எஸ்.,க்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Durai Kuppusami
பிப் 21, 2025 08:00

நீங்க என்ன லூசா ஏதாவது இருக்கா என்ன பெனாத்தரீங்கன்னு உங்களுக்கு தெரியுதா மகா மட்டமான இருக்கு நீங்கயெல்லாம் ஒரு அமைச்சர்.......


Dharmavaan
பிப் 20, 2025 21:01

பெண் கெட்ட பிறகு புகார் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன .உன் திருட்டு ரவுடி கூட்டத்தை அடக்கி வைக்க வக்கில்லை பெருமை வேறா அற்பனே


சிட்டுக்குருவி
பிப் 20, 2025 19:37

இப்போதுதான் பாடசாலைகளில் குற்றங்கள் மிகுதியாக நடக்கின்றது என்பதுதான் உண்மை.ஏன் என்றால் எல்லோரும் சாராயம் குடித்துவிட்டு வேலைக்கு வரலாம் என்றிருப்பதினால் .சாராயத்தை ஒழித்தால்/அல்லது குடித்துவிட்டு வேலைக்கு வந்தால் உடனே டிஸ்மிசல்,பென்ஷன் இல்லை,அரசு செலுத்தும் எந்த சலுகைகளும் இல்லை என்ற சட்டம் இயற்றுங்கள்.குற்றங்கள் குறையலாம்.உண்மை காரணத்தை மறைப்பது போகாத ஊருக்கு வழிசொல்வதுதான்.


vbs manian
பிப் 20, 2025 19:33

பெற்றோருக்கு பேதி கிளப்புகிறார்.


vbs manian
பிப் 20, 2025 19:33

குற்றங்களை தடுக்க முடியவில்லை என்று வாக்குமூலம்.


பேசும் தமிழன்
பிப் 20, 2025 19:20

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.... கொலை நடந்த பின்பு கொலையாளியை கைது செய்தால்.... கொலை சரியாகி விடுமா..... ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட பின்பு.... அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து விட்டால்.... அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை சரியாகி விடுமா ???..... இது ஆணவம் மற்றும் பிதற்றலின் உச்சம்.


orange தமிழன்
பிப் 20, 2025 19:05

பிதற்றலின் உச்சம்.....இதெல்லாம் ஒரு அமைச்சர்.....


kumar c
பிப் 20, 2025 18:43

இப்படித்தான் கரு. மின்வெட்டு பற்றி கேட்டா ஏறுக்கு மாற பதில் சொன்னாரு . 2014 ல கை மேல பலன் கிடைச்சு .இப்ப 2026 வருது பாப்போம்


vijai hindu
பிப் 20, 2025 18:34

டுபாக்கூர்


Laddoo
பிப் 20, 2025 18:12

பத்தாவது பெயில் சட்ட அமைச்சராம் கேவலம் மகா கேவலம்