வாசகர்கள் கருத்துகள் ( 101 )
மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் சுருட்டப்படுகிறது, மந்திரிகள் இப்படியென்றால், எம் ஏக்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள், இவர்களெல்லாம் எப்படி சுருட்டுவார்கள் என்பதை ஓட்டளித்த வாக்காளர்கள் கவனிக்கவேண்டும், உணர்ந்து ஏதோ ஒரு நாள் சுவைக்காக பிரியாணியும் பாட்டிலும், ஒரு வாரத்திற்கும் போதாத இலவசப்பணம் பெரும் மக்கள் வரும் தேர்தலில் அறிவுபூர்வமாக வாக்களிக்கவேண்டும் .
திமுக அமைச்சர்கள் அதிமுக வில் இருந்த போது செய்த ஊழல்களுக்கு திமுக எப்படி பொறுப்பாக முடியும்? (அவர்களுக்கு அந்த திறமை இருப்பதால்தானே கழகத்தில் சேர்த்துக் கொண்டோம்.?)
தமிழக வரலாற்றிலேயே ஊழலில் சிக்கிய அமைச்சர் பெருமக்களின் எண்ணிக்கை எப்போதுமே இருந்ததில்லை. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்டு புளங்காகிதம் அடைகின்ற ஸ்டாலின் இதன் பின்னரேனும் சம்பந்தப்பட்ட கண்ணப்பன் மீது உடனே நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். வெள்ளையறிக்கை மூலம். இந்தந்த அமைச்சர்கள் மீது இவ்வளவு ஊழல் புகார்கள் விசாரணையில் உள்ளது, இவர்கள் மீது கோர்ட் நடவடிக்கை உள்ளது. விசாரணையில் இருக்கும் அமைச்சர்களை பதவி விலக சொல்லி விசாரணை நேர்மையாக நடக்க முயற்சி செய்வாரா ஸ்டாலின். ஊருக்கு ஒரு நியாயம், பதவிக்கு வந்தபிறகு இன்னோர் முகம் என்று காட்டுவது சரியல்ல. இனி ஊழல் அமைச்சரவையின் முதல்வர் என்று ஸ்டாலின் பெருமையாக சொல்லிக்கொள்வாரா? இந்தியாவிலேயே தமிழக அமைச்சரவையில் மட்டும்தான் ஊழல்வாதிகள் நிறைந்த அமைச்சரவையாக இருப்பது தான் திராவிட மாடல் ஆகுமோ? தமிழர்கள் ஒருபோதும் இப்படி ஊழல் செய்து ஊரான் வாயில் விழுந்து பிழைக்க மாட்டார்கள். இந்த திராவிடர்கள் மட்டும்தான் இப்படியும் வாழ்வார்கள். ஸ்டாலின் தமிழனாக நேர்மையாக இருக்கப்போகிறாரா? அல்லது ஊழலில் உச்சம் தொட்டுகொண்டுள்ள அமைச்சர்களை வைத்துக்கொண்டு தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அருவருப்பாக இருக்கிறது. நிஜமாகவே சொல்கின்றேன்... ஆட்சியை கலைத்துவிட்டு போகலாம்...ச்சை எவ்வளவுதான் எழுதுறது? திருந்த மாட்டேங்கிறாங்களே.. ஓட்டுப்போடுவோரையும் சேர்த்தே சொல்கின்றேன்
படிப்போம் விடியலரசை காறிதுப்புவோம். மறப்போம். பொதுமக்களாகிய நம்மால் வேறென்ன செய்ய முடியும். மீறி முறைத்துக்கொண்டு நின்றால் கஞ்சா கேஸ் பாய்ந்து வரும்.
ஊழல் ஊழல் ஊஊ
பிரிட்டிஷ் கால குத்தகை முடிந்தவுடன் நிலம் தானே அரசுக்கு / உரிமையாளருக்கு மாறிவிடும்.1. கிராம , டவுன், வருவாய் சர்வே எண் 2. வார்டு, பழைய வார்டு, தேர்தல் வார்டு, 3 . கதவு எண் பலமுறை மாறி இருக்கும். குத்தகை பத்திரத்தில் /மூல பாத்திரத்தில் உள்ள விவரம் அடுத்த பதிவில் இருக்காது. ? பட்டா பெற்று நில பதிவு இருக்காது. வரி பாக்கியில்லை என்ற சான்று கேட்க மாட்டார்கள். நில மோசடிக்கு பத்திர பதிவு பெரிதும் உதவும். திராவிட நில அபகரிப்பை நிரூபிக்க முடியாது. நில அபகரிப்பு குறைய அனைத்து பதிவை ரத்து செய்து, கிரய பத்திர அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்து மறு பதிவு செய்ய வேண்டும்.
இந்த மாதிரி ஊழல் செய்யும் அமைச்சர்களை களையெடுப்பது மக்கள் சக்திக்கு தான் உள்ளது. அவர்களுக்கு காசை கொடுத்து ஓட்டு வாங்கும் கும்பல் இருக்கும் வரை இவர்கள் கொட்டம் இருக்கும். இப்பொழுது இருக்கும் அமைச்சர்களில் ஊழல் செய்யாதவர்கள் ஒருவரும் இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றுதான் எல்லா அமைச்சர்களின் போக்கு இருக்கிறது. சுரண்டியது வரைக்கும் ஆதாயம் என்று உள்ளனர். இதற்கு 2026 தேர்தல்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஒரு அரசியல்வாதி கட்சிக்கு பலகோடி நிதி எப்படி தர முடிகிறது ?? எங்கிருந்து வருகிறது ? அதை தாண்டி லாபம் எடுக்க, எப்படி எல்லாம் செயல்படுவார் ? தேர்தலுக்கு முன்னர் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு. பதவி முடியும்போது அவரது சொத்து மதிப்பு எவ்வளவு. இதையெல்லாம் கண்டுபிடித்து தெரிந்தாலே போதும். அவரது தகுதி தெரியும். நாம் தான் அதை செய்வதில்லையே. ஒன்று கட்சியை பார்ப்போம் அல்லது தலைவனை பாப்போம் அல்லது இலவசம் / குவார்ட்டர் / ரூபாய் / சலுகைக்கு மயங்கி வாக்களிப்போம். அதுசரி, இப்போது தெரிகிறதா, ஏன் அரசியல்வாதி ஆகி பதவிக்கு வர துடிக்கின்றனர் மற்றும் தங்கள் வாரிசுகளை தொடர்ந்து அரசியலில் பதவிக்கு சுய மரியாதை இழந்து தொடர்கின்றனர் என்று. எல்லாம் கலிகாலம்.
மோடி தேர்தல் பத்திரம் வெளியிட காரணம் என்னவென்றும் மாற்றுக் கட்சிகளை சகல வித்தைகளாலும் அழிக்க துடிப்பதேன் என்றும் விளக்க வேண்டும்
3 வருடத்தில் 30000 கொள்ளை பெருசா? - 1991 முதல் இன்றுவரை கொள்ளை அடித்த 411 கோடி பெருசா...திராவிடத்திற்கு வந்த கேவலம்.
இவர் ஒரு தெலுங்கர் அதனால் இது மறக்கப்பட்டு விடும்
இல்லை நண்பா பக்கா தமிழ் கோனார் ..