உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகன் மாநாடு அழைப்பிதழ் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

முருகன் மாநாடு அழைப்பிதழ் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை : மதுரையில், நாளை மறுநாள் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கின்றனர். இந்நிலையில், சென்னையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு அழைத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்?இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுபடுத்தும் மாநாட்டை முருகன் பெயரில் மதுரையில் நடத்துகின்றனர். கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம். தி.மு.க., ஆட்சியில், 117 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.பழனியில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. முருக கடவுளுக்கு சிறப்பு செய்யும் ஆட்சியாக, தி.மு.க., அரசு இருக்கிறது. ஏற்கனவே, வேலை கையில் எடுத்துக்கொண்டு, பா.ஜ.,வினர் ஊர் ஊராக சுற்றினர்; அதில் கிடைத்தது பூஜ்யம் தான். தமிழக முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் தான் முருகன் இருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்றபோது, முருகன் மாநாட்டுக்கான அழைப்பிதழை என்னிடம் தந்தனர். முருகன் படம் அதில் இருந்ததால் வாங்கினேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

V RAMASWAMY
ஜூன் 21, 2025 08:34

அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் கேட்கும் கட்சியினர், தமிழ் நாட்டிற்கு அவர்கள் கட்சி மாநாடுகளுக்கு மற்ற மாநில தலைவர்களுக்கு ஏன் அழைப்பு விடுத்து மரியாதை செய்யவேண்டும், தமிழ் நாட்டிற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சுயலாபத்துக்காக, தலைவர்களை காக்காய் பிடிப்பதற்காக உளறுபவர்களை பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம், புறக்கணித்தால் போதும்.


sankaranarayanan
ஜூன் 20, 2025 17:33

நம்பிக்கையுள்ளவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் நம்பிக்கையில்லாதவர்கள் வாயையும் ....மூடிக்கொண்டு சும்மா கிடக்க வேண்டும் வம்பு பண்ணக்கூடாது அறநிலைத்துறை அமைச்சராக இருந்துகொண்டு இப்படி பேசவது உனது தொழிலுக்கு விரோதம் நன்றிகெட்டவர் நெற்றியி பட்டையும் குங்குமமும்ம் பூசி ஊரை ஏமாற்றாதே உனது உள்ளம் நல்லதல்ல முதலில் நீ ராஜினாமா செய்


A P
ஜூன் 20, 2025 17:06

இந்துக்களின் பக்கா எதிரி. கடவுள் பிரசாதமான திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்தவர் முருகனுக்கு வேண்டியவராம். நாக்கு கூசவில்லையா ?


arumugam mathavan
ஜூன் 20, 2025 14:23

ஏன் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்தால்தானே பக்தி மாநாட்டிற்கு பெருமை சேர்க்கும், நீங்கள் , முதல்வர் , அமைச்சர்கள் வராதபோது மற்ற மாநிலத்தில் இருந்து வந்து பெருமை சேர்த்து, தமிழகத்தில்தான் கவுரவம். இல்லை நீங்களே வந்து தலைமைதாங்க வேண்டியதுதானே....இல்ல வழிய விடுங்க


S.kausalya
ஜூன் 20, 2025 13:25

கை அரிப்பு எடுக்கும் போது எல்லாம் கும்பாபிஷேகம் நடத்த படுகிறதே


V RAMASWAMY
ஜூன் 21, 2025 17:50

ரொம்ப சரி.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:42

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு அழைத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் இருவரும் இந்தியர்கள். சனாதானத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களை மாநாட்டுக்கு அழைத்ததில் தவறேதும் இல்லை..


sridhar
ஜூன் 20, 2025 11:28

முருகன் தமிழக எல்லையை தாண்டினால் கடவுள் கிடையாதா . ' குமார சம்பவம் ' என்ற காவியம் kelvi பட்டு இருக்கீங்களா . God is omnipresent என்றால் அர்த்தம் தெரியுமா . அட தற்குறிகளா .


Rajah
ஜூன் 20, 2025 09:56

வரிசையில் நின்று நோன்புக் காஞ்சி குடிக்கும் திமுக மந்திரிகளுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நோன்பு துறக்கும் நிகழ்வில் அரசியல் பேசுவது நீங்கள்தான்.


V RAMASWAMY
ஜூன் 20, 2025 09:44

நாத்திக கட்சிக்கு இருக்கும் சம்பந்தத்தை விட ஆத்திகர்களுக்கு தர்ம பூமி கர்ம பூமியாக விளங்கும் அனைத்து பாரதத்திலும் சம்பந்தம் உண்டு. தமிழ்நாடு பாகிஸ்தானிலா இருக்கிறது?


R.MURALIKRISHNAN
ஜூன் 20, 2025 09:25

யார் இவர்?


புதிய வீடியோ