உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் நிதி நிலைமை சரியானால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்: அமைச்சர் சிவசங்கர்

அரசின் நிதி நிலைமை சரியானால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ''எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராகும்பட்சத்தில், ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்கும் கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:

காங்கிரஸ் - கருமாணிக்கம்: திருவாடனை தொகுதி தொண்டியில், போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என, நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். இங்கு பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைந்து பணிகளை செய்து தர வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: போக்குவரத்து கழகத்தின் நிதி நிலைமை அனைவரும் அறிந்தது தான். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி நிதியிலும் பணிமனை அமைக்கலாம். அதற்கு நிதி தர முன்வர வேண்டும்.கருமாணிக்கம்: தொகுதி மேம்பாட்டு நிதி தருவதற்கு தயாராக உள்ளேன். அதே நேரத்தில், போக்குவரத்து துறையும் நிதி ஒதுக்க வேண்டும். தொகுதி முழுதும் பழைய பஸ்கள் ஓடுகின்றன. அவற்றை மாற்ற வேண்டும். பெண்களுக்கு விடியல் பயணம் தருவது போல, ஆண்களும் அரசு பஸ்களில் இலவசமாக செல்ல, விடியல் பயணம் வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: அரசு நிதி நிலைமை, போக்குவரத்து கழகத்தின் நிதி நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். நிதி அமைச்சரின் அறிவுரை பெற்று, அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்களுக்கும் இலவச பயணம் என்ற உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராகும்பட்சத்தில், இந்த கோரிக்கையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.பழைய பஸ்கள் மாற்றப்பட்டு, இதுவரை 3,400 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Karuthu kirukkan
ஏப் 10, 2025 06:41

எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராகும்பட்சத்தில், ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்கும் கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் .எப்போ ? சும்மா உருட்டி விடு ,,,


கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 09, 2025 18:24

எப்படியாவது எல்லாரையும் குடிக்கவைத்து விட்டால், தமிழர் கலாச்சாரம் அதல பாதாளத்தில் போய்விடும், வருமானம் ரெட்டிப்பாகும், ஆண்களுக்கு இலவச பயணம். தீயமுகாவின் திராவிட மாடல்.


sankaranarayanan
ஏப் 09, 2025 17:32

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுத்தவர்கள் இப்போது ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், கொடுக்க முன்வந்திருப்பது திராவிட மாடல் ஆட்சியின் நிதி நிலைமையையே காட்டுகின்றது.இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது பிறகு ஏன் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்று கூவவேண்டும்


மோகன்
ஏப் 09, 2025 15:11

இன்னுமா மக்கள் இவங்கள நம்பிகிட்டு இருக்காங்க.


நாஞ்சில் நாடோடி
ஏப் 09, 2025 14:03

தமிழன்... இலவசத்துக்கு ஆசைப்பட்டு இழந்து கொண்டே இருக்கிறான். முதன்முதலில் இலவசத்துக்கு ஆசைப்பட்டு காமராஜரை இழந்தான்...


sethu
ஏப் 09, 2025 13:46

கோபாலபுரம் குடும்பத்தில் ஒருலட்சம் கொடியெல்லாம் கடந்து இப்பொது ஒன்பது இலட்சம் கோடியாக 170 நபர்கள் இருகிறார்கள் அதெல்லாம் லிஸ்டில் இல்லையே


sasidharan
ஏப் 09, 2025 13:39

நிதர்சனமான உண்மை


Anantharaman Srinivasan
ஏப் 09, 2025 13:25

அரசின் நிதி நிலைமை சரியானால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்: அமைச்சர். "அத்தைக்கு மீசை முளைத்தாலும் முளைக்கும். நிதி நிலைமை சரியாக வாய்ப்பில்லை."


Anbuselvan
ஏப் 09, 2025 12:15

திரு கருமாணிக்கத்தின் இந்த கேள்வி பிற்காலத்தில் வரலாறாக பார்க்கப்படும், ஒரு வேளை இந்த உலகம் பெண்கள் ஆதிக்கத்துடன் இயங்க அரம்பித்தாள்.


Balakumar V
ஏப் 09, 2025 11:40

இலவசமாக நல்ல முறையில் ஆட்சி வேண்டும். ஓசி வேண்டாம்.


சமீபத்திய செய்தி