உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துண்டு சீட்டு கொடுத்திருக்கலாம்: அமைச்சர் கிண்டல்

துண்டு சீட்டு கொடுத்திருக்கலாம்: அமைச்சர் கிண்டல்

''துண்டு சீட்டில் எழுதி கொடுத்திருந்தால் கூட, பணியை நிறைவேற்றி இருப்போம்,'' என, தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வை, அமைச்சர் சேகர்பாபு கிண்டல் அடித்தார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க.,- சிவகாமசுந்தரி: கிருஷ்ணராயபுரம் பழைய கவுண்டன் பேரூராட்சியில் 1,300 ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவில் குளம் பராமரிப்பின்றி உள்ளது. இதனை சீர்செய்து, கம்பிவேலி அமைத்து, சிறுபூங்கா அமைத்து, திருமண மண்டபம் கட்டித் தர வேண்டும்.அமைச்சர் சேகர்பாபு: எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, நான்கு ஆண்டுகளாக என் பக்கத்திலேயே அமர்ந்து இருக்கிறார். அவர் ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்திருந்தால் கூட, அந்த பணியை நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி இருப்போம். இருந்தாலும், பரவாயில்லை. அவரது கோரிக்கையை ஆய்வு செய்து, அதன் நிலை அறிந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ