உண்மைக்கு புறம்பாக பேசும் அமைச்சர்
திண்டுக்கல்லில் தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலர் சுபின் கூறியதாவது: 'கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருப்பது அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எம்.ஆர்.பி., தேர்வின் மூலம் 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் கடந்த 2015ல் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், இரு ஆண்டுகள் பணி முடித்ததும் நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எட்டு ஆண்டுகளாக, 8,000 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல், 18,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலும், தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, தெரிவித்தது. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.உண்மைக்கு புறம்பான தகவல்களை, அமைச்சர் பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து, துறையிலும், ஊழியர்கள் நலனிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.