உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆப்சென்ட்

 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆப்சென்ட்

சென்னை: சட்டசபையில் நேற்று பொது மற்றும் வேளாண் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஆர்வமுடன் சபைக்கு வந்திருந்தனர். சபாநாயகர் வருவதற்கு முன்பாக, துணை முதல்வர் உதயநிதியும், அவரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் சபைக்கு வந்தனர். வழக்கம்போல திருக்குறளை வாசித்து, சபாநாயகர் சபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ஆனால், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், நேற்று சபைக்கு வரவில்லை. இதேபோல, முன்னாள் சபாநாயகரும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான தனபால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் ஆகியோரும் சபைக்கு வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை